ஜோதிராவ் புலே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜோதிபா கோவிந்த ராவ் புலே | |
|---|---|
| முழுப் பெயர் | ஜோதிபா கோவிந்த ராவ் புலே |
| பிறப்பு | ஏப்ரல் 11, 1827 கட்கன், சதாரா, மஹாராஸ்டிரா, இந்தியா. |
| இறப்பு | நவம்பர் 28 1890 (அகவை 63) பூனே, மஹாராஸ்டிரா, இந்தியா |
| காலம் | 19 ஆம் நூற்றாண்டு தத்துவம் |
| பகுதி | இந்தியா |
| சிந்தனை மரபுகள் | இந்திய தத்துவம் |
| முக்கிய ஆர்வங்கள் | நன்னெறி, சமயம், மனிதநேயம் |
மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (மராட்டி: जोतीबा गोविंदराव फुले) இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி. சமூக அவலங்களுக்கெதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.[1]
ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857 சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.
1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் சத்ய சோதக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ ஜி.பி. தேஷ்பாண்டே. ஜோதிராவ் புலேயின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள். பாரதி புத்தகாலயம். pp. 338.