பிரெஞ்சு இந்தியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||||||||||||||||
பிரெஞ்சு இந்தியா என்றப் பொதுப்படையானப் பெயர் இந்தியாவில் முன்பு பிரான்சு நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் (பிரெஞ்சு: établissements français de l'Inde) குறிப்பதாகும். இவை கோரமண்டல் கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம், மலபார் கடற்கரையில் மாஃகே, மற்றும் வங்காளத்தில் சந்தன்நகர் ஆகும். இவற்றைத் தவிர மச்சிலிப்பட்டணம், கோழிக்கோடு சூரத் ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (loges) உண்டு.
மொத்தப் பரப்பளவான 510 கிமீ2 (200 ச மைல்)வில் புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் 293 கிமீ2 (113 ச மைல்) இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள்தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.
உசாத்துணைகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் French rule in India தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- பாண்டிச்சேரியின் விடுதலை இயக்கம் Freedom struggle - இந்திய அரசு வெளியீடு
- புதுச்சேரி
- இந்தியாவில் பிரெஞ்சுப் புத்தகங்கள் - திறந்த அணுக்கமுடைய, 1000+ நூற்தொகுப்பு, 50 மிக முக்கியமான நூல்களுக்கு அறிமுகம், குறிப்புரைகளுடன்