பண்டிதை ராமாபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பண்டிதை ராமாபாய்
பண்டிதை ராமாபாய்
பிறப்பு 23.04.1858
கங்கமூலா, கர்நாடகா
இறப்பு 05.04.1922
மகாராஷ்டிரா, இந்தியா

பண்டிதை ரமாபாய் (23.04.1858 - 05.04.1922) பிராமணக் குடும்பத்தில் பிறந்து பின்னர் கிறித்தவ மதத்துக்கு மாறிய சமூக சீர்திருத்தவாதி ஆவார். விதவை மறுமணம் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். ரமாபாய் ஒரு மஹாரஷ்டிர பால்ய விதவை.தமது 22 ஆம் வயதில் ஒரு வங்காளியைத் திருமணம் செய்து இரண்டு ஆண்டில் மீண்டும் விதவையானார். பின் இங்கிலாந்து சென்று கிறித்துவ மதத்திற்கு மாறினார். அதன் பின்னர் அமெரிக்கா சென்று ஏராளமான குழுக்களை (ரமாபாய் வட்டங்கள்) ஆரம்பித்தார். அங்கு பணம் திரட்டி இந்தியாவில் பால்ய விதவைகளுக்காகப் பள்ளி தொடங்குவது அவர்து நோக்கமாக இருந்தது.

நோக்கம் உயர்வாக இருந்த அளவு வழிமுறை ஏற்கத்தக்கதாக இல்லை. இந்தியாவில் பெண்களும் விதவைகளும் நடத்தப்படும் விதத்தை மிகவும் மோசமாகச் சித்தரித்துப் பணம் திரட்டினார். பெண்கள் தங்களைத் தேர்ச் சக்கரத்தில் இட்டு உயிரை மாய்ப்பது, பெண் குழந்தைகளைக் கங்கையில் முதலைக்குப் பலியாக்குவது போன்ற ஏராளம் கட்டுக்கதைகளைக் கூறினார்.

போஸ்டனில் தான் சுவாமி விவேகானந்தர் முதன்முதலாக ரமாபாய் வட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமது சொற்பொழிவுகளில் இந்தக் கட்டுக்கதைகளின் தாக்கத்தை மாற்றி உண்மை நிலையை எடுத்துக் கூறினார்.அதிலிருந்து இந்தப்பிரச்சினை நீண்டகாலத்திற்கு சுவாமி விவேகானந்தரின் பணிகளுக்கு ஒரு தடங்கலாகவே இருந்தது. [1]

சுவாமி விவேகானந்தர் பற்றிய அவதூறுகளையும், கட்டுக்கதைகளையும் அமெரிக்காவில் பரப்பியது ரமாபாய் வட்டம். இவர்களுடன் இணைந்து செயல்பட்ட மற்றொருவர் இந்திய குமாரி கார்னீலியா சோரப்ஜி.

இவரது வட்டத்தினர் பற்றி தனது கடிதத்தில் சுவாமி விவேகானந்தர் "ரமாபாய் கூட்டத்தினர் என்னைப் பற்றி கிளப்பியிருக்கின்ற வதந்திகளைக் கேட்டுத் திகைப்பாக உள்ளது. ஒருவன் எப்படி நடந்துகொண்டாலும் சரி, அவனைப்பற்றி பச்சைப் பொய்களைக் கட்டிவிடுகின்ற மக்கள் இருக்கவே செய்வார்கள். சிகாகோவில் இது எனக்குத் தினசரி அனுபவமாக இருந்தது. இந்தப்பெண்கள் கிறிஸ்தவர்களுள் மகா கிறிஸ்தவர்கள்தான்!" என்று எழுதுகிறார். [2]

External links[தொகு]

பண்டிதை ராமாபாய் வரலாறு

சமூக சீர்திருத்தவாதி உருவாகிய விதம்

மேற்கோள்கள்[தொகு]

  1. சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு 1; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 536
  2. சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு 1; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 630
"http://ta.wikipedia.org/w/index.php?title=பண்டிதை_ராமாபாய்&oldid=1682414" இருந்து மீள்விக்கப்பட்டது