பஞ்சாப் (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(பஞ்சாப் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
பஞ்சாப் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் ஹரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டீகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு அதிகம் உள்ளனர். பஞ்சாபில் கோதுமை அதிகம் விளைகிறது. பஞ்சாபில் ஜீலம், செனாப், ராவி, பீஸ், சட்லஜ் ஆகிய ஐந்து ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. இந்த ஐந்து ஆறுகள் பாய்வதாலேயே பஞ்சாப் என பெயர் பெற்றது.

