குல்பர்கா

ஆள்கூறுகள்: 17°20′00″N 76°50′00″E / 17.3333°N 76.8333°E / 17.3333; 76.8333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்பர்கா

ಗುಲ್ಬರ್ಗ

—  நகரம்  —
வரைபடம்:குல்பர்கா, இந்தியா
குல்பர்கா
இருப்பிடம்: குல்பர்கா

, கருநாடகம்

அமைவிடம் 17°20′00″N 76°50′00″E / 17.3333°N 76.8333°E / 17.3333; 76.8333
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
பிரிவு குல்பர்கா கோட்டம்
மாவட்டம் குல்பர்கா மாவட்டம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
நகராட்சி ஆணையர்
மக்களவைத் தொகுதி குல்பர்கா
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


454 மீட்டர்கள் (1,490 அடி)

குறியீடுகள்


குல்பர்கா அல்லது கலபுரகி (ஆங்கிலம்: Gulbarga, Kalaburagi கன்னடம்: ಗುಲಬರ್ಗಾ, ಕಲಬುರಗಿ, தமிழ்: கொள்ளிப்பாக்கை ) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். கடந்த ஆண்டு கருநாடக அரசாங்கம் குல்பர்கா நகரத்தின் பெயரை அதன் கன்னட வடிவமான கலபுரகி என மாற்றம் செய்தது[1]. கன்னட மொழியில் கலபுரகி என்றால் தமிழில் கல்பரப்பி என , அதாவது கற்களை பரப்பியது போல காணப்படும் ஒரு நகரம் என பொருள்படும்.

இது குல்பர்கா மாவட்டம் மற்றும் குல்பர்கா கோட்டத்தின் தலைநகருமாகும். இந்த நகரம் முன்னதாக நிசாமின் ஐதராபாத் இராச்சியத்தின் அங்கமாக இருந்தது. ஐதராபாத்திலிருந்து 200 கிமீ தொலைவிலும் மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து வடக்கே 623 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

ஆறாம் நூற்றாண்டில் இராஷ்டிரகூடர்கள் தற்போதைய குல்பர்கா பகுதியை கட்டுப்படுத்தி வந்தபோதும் சாளுக்கியர்கள் தங்கள் கைவசப்படுத்தி 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்தனர். 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேவகிரி யாதவர்களும் மற்றும் ஹளபேடுவைச் சேர்ந்த ஹொய்சளர்களும் இப்பகுதியை ஆண்டு வந்தனர். தற்போதைய குல்பர்கா மாவட்டம் மற்றும்ராய்ச்சூர் மாவட்டம் பகுதிகள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன.வடக்குத் தக்காணம், குல்பர்கா மாவட்டம் உட்பட, தில்லி சுல்தான்களின் ஆட்சியில் இருந்தது. அவர்களது ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்த இசுலாமிய படை அதிகாரிகள் ஆசன் கங்கு தலைமையில் பாமினி பேரரசை நிறுவினர். 1347ஆம் ஆண்டு அசெனாபாத் என அழைக்கப்பட்ட குல்பர்காவை தங்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.

1724ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்படும்வரை குல்பர்கா நிசாமின் ஆட்சியில் ஐதராபாத் இராச்சியத்தின் அங்கமாக இருந்தது.

வானிலை[தொகு]

குல்பர்காவின் காலநிலை மூன்று பருவங்களாக உள்ளது. வேனில் காலம் பெப்ரவரி நடுவிலிருந்து சூன் நடு வரை உள்ளது. இதனையடுத்து தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று|தென்மேற்குப் பருவக் காற்றினால் சூன் இறுதி முதல் செப்டம்பர் இறுதி வரை மழைக் காலமாக உள்ளது. இதனை அடுத்து வறண்ட குளிர்காலம் சனவரி இறுதிவரை நிலவுகிறது. இந்த மூன்று காலங்களில் காணப்படும் வெப்பநிலை:

  • வேனில் காலம்: 40 - 48 °C
  • மழைக்காலம்: 25 - 37 °C
  • குளிர் காலம் : 07 - 26 °C

மக்கள்தொகையியல்[தொகு]

2001 இந்தியக் கணக்கெடுப்பின்படி குல்பர்காவின் மக்கள்தொகை 427,929 ஆகும். ஆடவர் 55% உம் மகளிர் 45%உம் ஆக உள்ளனர். குல்பர்காவின் படிப்பறிவு தேசிய வீதமான 59.5%ஐவிட சற்றே கூடுதலாக 67%ஆக உள்ளது. ஆண்கள் படிப்பறிவு 73% ஆகவும் பெண்கள் படிப்பறிவு 60% ஆகவும் உள்ளது. மக்கள்தொகையில் 13% பேர் ஆறு வயதிற்கும் குறைவான வயதுடையோராவர்.

கன்னடமும் உருதும் முதன்மையான மொழிகளாக விளங்குகின்றன. மராத்தி அதிக அளவில் பேசப்படுகிறது. இந்து மற்றும் இசுலாம் சமயத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர்.

காட்சிக்கூடம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gulbarga
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்பர்கா&oldid=3585036" இலிருந்து மீள்விக்கப்பட்டது