தக்காணப் பீடபூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தக்காண பீடபூமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய வரைபடத்தில் தக்காணப் பீடபூமியின் அமைவிடம்

தக்காணப் பீடபூமி (Deccan Plateau) (தக்காண மேட்டுநிலம்)என்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் உள்ளதாகும். தென்னிந்தியாவின் பெரும்பகுதி தக்காண பீடபூமியை சேர்ந்தது.

கங்கைச் சமவெளிக்கு தென்புறம் தக்காணப் பீடபூமி அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதி உயரம் கூடியும் கிழக்குப்பகுதி உயரம் குறைந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக தக்காணப் பீடபூமியில் பாயும் ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் உயரமாக இருப்பதால் தென்மேற்கு பருவக்காற்று மூலம் வரும் ஈரப்பதத்தை தடுத்து விடுகிறது. இதனால் தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் கோதாவரியும் அதன் துணையாறுகளும் தக்காணப் பீடபூமியின் மேற்பகுதியையும் கிருஷ்ணாவும் அதன் துணையாறுகளும் தக்காணத்தின் நடுப்பகுதியையும், காவிரி அதன் துணையாறுகளும் தக்காணத்தின் கீழ்ப்பகுதியையும் வளம்பெறச் செய்கின்றன.

காவிரி ஆறு
அணைகள்

பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை |

துணையாறுகள்

அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு |
லட்மண தீர்த்தம் ஆறு | ஹாரங்கி ஆறு | நொய்யல் ஆறு | பம்பார் ஆறு | சிம்சா ஆறு

கிளையாறுகள்

கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி

நகரங்களும் ஊர்களும்

காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி

புவியியல் அமைப்புகள்

வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை

பாசன மாநிலங்கள் மற்றும்
ஆட்சிப்பகுதிகள்

கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு

"http://ta.wikipedia.org/w/index.php?title=தக்காணப்_பீடபூமி&oldid=1396883" இருந்து மீள்விக்கப்பட்டது