கதம்பர் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கதம்பர்கள்
ಬನವಾಸಿ ಕದಂಬರು
பனவாசியின் கதம்பர்கள்
Empire
(345 வரை பல்லவர்களுக்கு கீழ்)
Blank.png
345 – 525 Blank.png
கதம்பர்கள் அமைவிடம்
     500யில் கதம்பர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி
தலைநகரம் பனவாசி
அரசு முடியாட்சி
ராஜா
 - 345-365 மயூரவர்மா
 - 365-390 கனகவர்மா
 - 390-415 பகிதர்கா
 - 435-455 காகூசுதவர்மா
 - 455-460 சந்திவர்மா
 - 460-480 மிருகேசவர்மா
வரலாறு
 - நிறுவிய ஆண்டு 345
 - கலைக்கப்பட்டது 525
பனவாசியின் கதம்பர்கள் காலக்கோடு

கதம்பர் வம்சம் (கன்னடா: ಕದಂಬರು) (345 - 525 கி.பி) கர்நாடக மாநிலத்தின் உத்திர கன்னடா மாவட்டத்தின் பவவாசியை தலைமயிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த ராசவம்சமாகும். இவர்கள் கர்நாடகத்தின் பேரரசுகளான சாளுக்கியர், ராசுடுரகூடர் போன்றவர்களின் இரானுவ துணையோடு தற்போதைய கோவா, கன்கல் போன்ற பகுதிகளை ஆண்டு வந்தனர். கதம்ப அரசனான காகுசுடவர்மனின் ஆளுகையில் கர்நாடகத்தின் பெரும்பகுதி கதம்பர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கர்நாடகத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்களில் கதம்பர்கள் மட்டுமே கன்னடா மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு முன்பு ஆண்ட மன்னர்கள் அனைவரும் வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். கதம்பர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் கன்னடம் ஆட்சி மொழியாக இருந்து வந்தது. கன்னடம் ஒரு வட்டார மொழியாக வளர்ந்ததற்கு கதம்பர்கள் முக்கிய காரணமானவர்கள்.கதம்பர் வம்சத்தை முதன்முதலில் 345ஆம் ஆண்டு தோற்றியவர் மயூரசர்மா ஆவார்.

கதம்பர்கள் சமண மதத்தையும் ஆதரித்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு சமணக்கோவில்களை நிருவினர். கதம்பர்கள் கட்டிய பல கோவில்கள் மிகச்சிறந்த கட்டிட்க்கலை அமைப்பைக் கொண்டவையாகும். பனவாசியில் அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

மதுகேசுவரா ஆலயம், பனவாசி
மதுகேசுவரா ஆலயம், பனவாசி
"http://ta.wikipedia.org/w/index.php?title=கதம்பர்_வம்சம்&oldid=1352786" இருந்து மீள்விக்கப்பட்டது