கோலார் மாவட்டம்
| கோலார் மாவட்டம் | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகம் |
| தலைமையகம் | கோலார் |
| ஆளுநர் | பரத்வாஜ்[1] |
| முதலமைச்சர் | சித்தராமையா[2] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
கோலார் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கோலார் நகரத்தில் உள்ளது. கோலார் தங்க வயல் இம் மாவட்டத்திலேயே உள்ளது. 8,225 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டம் கிழக்கு நில நிரைக்கோடுகள் 77° 21', 78° 35' ஆகியவற்றுக்கு இடையிலும், வடக்கு நில நேர்க்கோடுகள் 120 46', 130 58' ஆகியவற்றுக்கு இடையிலும் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள இந்த மாவட்டமே மாநிலத்தின் கிழக்குக் கோடியில் அமைந்த மாவட்டமாகவும் உள்ளது.
இம் மாவட்டம் மேற்கில் பெங்களூரு நாட்டுப்புறம், தும்கூர் மாவட்டம் ஆகியவையும், வடக்கிலும் கிழக்கிலும் முறையே ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனந்தபூர், அதே மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர் ஆகிய மாவட்டங்களும், தெற்கில் தமிழ் நாட்டு மாவட்டங்களான கிருட்ணகிரி, வேலூர் என்னும் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம் மாவட்டத்தின் மக்கள்தொகை 2,536,069 ஆகும். இங்கே 15 நகரங்களும், 2889 மக்கள் வாழும் ஊர்களும், 432 மக்கள் வாழாத ஊர்களும் உள்ளன.
மேற்கோள்கள் [தொகு]
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
|
||||||||||||||