பள்ளிவாசல்
பள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன.
முசுலிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக பள்ளிவாசல்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று,மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் பள்ளிவாசல்கள் சிறப்புப் பெறுகின்றன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன. இன்று கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் பல குவிமாடங்கள், மினார்கள் என்று அழைக்கப்படும் கோபுரங்கள், பெரிய தொழுகை மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டனவாக அமைகின்றன.
மேலும் பார்க்க [தொகு]
- அல் அக்சா பள்ளிவாசல்-- யெருசலம்
- ஜாமா பள்ளி- டெல்லி
- Selimiye Mosque(சோபியா பள்ளிவாசல்)-- துருக்கி
- மஸ்ஜிதுல் ஹராம் -- மக்கா
- அல்-மஸ்ஜித் அந்-நபவி -- மதினா
உலகின் சில முக்கியமான பள்ளிவாசல்கள் [தொகு]
-
Masjid Nabawi. Medina, Saudi Arabia.jpg
மதீனத்துல் நபவி - மதீனா - சவூதி அரேபியா
-
ShahFaisalMosque-Islamabad.jpg
பைஸல் பள்ளிவாசல் - இஸ்லாமாபாத் - பாகிஸ்தான்
-
GOBUSTAN MOSQ.jpg
குகை பள்ளிவாசல் - அஸர்பைஜான்
-
Hajja Soad mosque.JPG
ஹஜ்ஜா ஸாட் பள்ளிவாசல் - சூடான்