நறவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நறவூர் என்பது சேர அரசன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் தலைநகர். 'நறவு' என்னும் சொல் போதை தர உண்ணப்படும் ஒருவகை அரிசிக் கஞ்சியை உணர்த்தும். இந்த ஊரின் பெயரும் 'நறவு' என வழங்கப்பட்டது. இது ஊர் என்பதை விளக்கும்பொருட்டு இதனைத் 'துவ்வா நறவு' எனக் குறிப்பிட்டுள்ளனர். இது கடலோரத்தில் இருந்த துறைமுகமும் ஆகும். [1]

  • பெரிப்ளஸ் இந்த ஊரை 'நெல்சிந்தா' எனக் குறிப்பிடுகிறார். [2]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நறவூர்&oldid=2565025" இலிருந்து மீள்விக்கப்பட்டது