தேவாரம்
| தொடரின் ஒரு பகுதி |
| இந்து புனித நூல்கள் |
|---|
|
நூல் பகுப்பு
|
|
காலக்கோடு
|
தேவாரங்கள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.
பொருளடக்கம் |
திருமுறைகளில் பாடல்கள் எண்ணிக்கை [தொகு]
| திருமுறை | பாடியவர்(கள்) | பாடல் எண்ணிக்கை |
| முதலாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,469 |
| இரண்டாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,331 |
| மூன்றாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,358 |
| நான்காம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 1,070 |
| ஐந்தாம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 1,015 |
| ஆறாம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 981 |
| ஏழாம் திருமுறை | சுந்தரமூர்த்தி நாயனார் | 1,026 |
| எட்டாம் திருமுறை | மாணிக்கவாசகர் | 1,058 |
| ஒன்பதாம் திருமுறை | 9 ஆசிரியர்கள் | 301 |
| பத்தாம் திருமுறை | திருமூலர் | 3,000 |
| பதினொன்றாம் திருமுறை | 11 ஆசிரியர்கள் | 1,385 |
| பன்னிரண்டாம் திருமுறை | சேக்கிழார் | 4,272 |
| மொத்தம் | 18,266 |
எட்டாம் திருமுறை என்பது மாணிக்கவாசகர் பெருமான் அருளியது. இத்திருமுறையில் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் இடம்பெற்றுள்ளன.
சம்பந்தர் பாடல்களைத் 'திருக்கடைக் காப்பு' என்றும், நாவுக்கரசர் பாடல்களைத் 'தேவாரம்' என்றும், சுந்தரமூர்த்தி பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் சுட்டுவது வழக்கம். தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
ஒன்பதாவது திருமுறை [தொகு]
ஒன்பதாம் திருமுறையில் உள்ள பதிகங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் ஒன்பது பக்தர்களாவர்[1]:
பதினொன்றாம் திருமுறை [தொகு]
பதினொன்றாம் திருமுறையில் உள்ள பதிகங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் பன்னிருவராவர்[2]:
பத்தாவது மற்றும் பனிரண்டாவது திருமுறைகள் [தொகு]
- பத்தாம் திருமுறை (திருமூலர் அருளிய திருமந்திரம்)[3]
- பன்னிரண்டாம் திருமுறை (சேக்கிழார் அருளிய பெரியபுராணம்)[4]
ஊசாத்துணை [தொகு]
புற இணைப்புகள் [தொகு]
|
||||||||