பிரம்ம சூத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரம்ம சூத்திரங்கள் உபநிடதங்களில் சொல்லப்படுபவற்றை ஒழுங்கமைத்துச் சுருக்கி விளங்கவைக்கும் முயற்சியில் இயற்றப்பட்ட நூல். இதன் ஆசிரியர் பாதராயணர் என்பவராவார். இவை வேதாந்த தத்துவத்தை விளக்குபவையாக கருதப்படுகின்றன.

இந்து சமயத்துக்கு அடிப்படையாக விளங்குவன வேதங்கள். வேதங்களின் இறுதிப்பகுதியாகவும், அவற்றின் சாரமாகவும் கருதப்படுபவை உபநிடதங்களாகும். நூற்றுக்கு மேற்பட்டனவாக உள்ள இந்த உபநிடதங்கள் பல்வேறு காலப்பகுதிகளில் உருவானதாலும், பலரால் இயற்றப்பட்டதாலும் இவற்றிலுள்ள தகவல்கள் ஒழுங்கின்றியும், சிதறிய நிலையிலும், பல சமயங்களில் ஒன்றுக்கொன்று முரணாகவும் தோன்றுவதால், இவற்றை வாசித்து விளங்கிக் கொள்வது மிகக் கடினமானது. ஆகவே பிரம்ம சூத்திரங்கள் இயற்றப்பட்டது

இந்து தத்துவங்களின்படி பிரம்மனாகிய பரம்பொருளை விளக்குவதற்காகச் சூத்திரங்கள் எனப்படும் நூற்பாக்களால் ஆனதால் இந்நூலுக்குப் பிரம்ம சூத்திரம் என்னும் பெயர் உண்டாயிற்று. வேதத்தின் இறுதிப் பகுதியாக அதாவது வேதத்தின் அந்தமாகக் கருதப்படும் உபநிடதங்களில் சாரமாக அமைந்திருப்பதன் காரணமாக இது வேதாந்த சூத்திரம் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

உபநிடதங்களுக்கு விளக்கங்கள் இந்தநூலும், அதன் சுருக்கம் காரணமாக அதன் உள்ளடக்கத்தைப் பல்வேறு விதமாகப் புரிந்து கொள்வதற்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது. இந்நூலுக்கு விளக்கமாக விரிவுரைகளை எழுதிய சங்கரர், இராமானுஜர், மத்வர், ஸ்ரீகண்டர், போன்றோர் இந் நூலின் உள்ளடக்கங்களுக்குத் தாங்கள் உணர்ந்துகொண்டபடி, வெவ்வேறு விதமான விளக்கங்களை அளித்ததன் மூலம், வேதாந்தம் - அத்வைதம், த்வைதம் மற்றும் விசிஷ்ட அத்வைதம் என்று மூன்று பிரபல பிரிவுகள் அடைந்தன.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்ம_சூத்திரம்&oldid=908541" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்