இதிகாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும். இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும். [1] இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.

நில உடமைச் சமுதாயம் ஒரு காலகட்டம் வரை இருந்து அடுத்த கட்டத்திற்கு மாறி செல்லும்போது அதன் பரிணாமங்கள், நிகழ்வுகள், மாறுதல்கள்,அனைத்தும் வாய்மொழியாக ஒருகாலகட்டம் வரையிலும் குருவின் மூலமாக சீடர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டு, செவி வழிச் செய்தியாக சில காலம் வரையிலும் இருந்து சமுதாய பரிணாம வளர்ச்சியை தனதாக்கிக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகள் கால ஓட்டத்தையும், அதன் சமூக நியதிகளை இதிலிருந்து எடுத்து மேற்கோள்கள் காட்டிடவும், நீதி சொல்லவும், சமுதாய சட்டங்களாகவும் காலத்தை கடந்தும், தெளிவாகவும், எளிமையாகவும், சிக்கலான, நெருடலான, மனிதகுலச் சிந்தனைகளை உள்வாங்கி, உயர்ந்து நிற்கிற வரலாற்றுப் பெட்டகமே இதிகாசமாகும்.

பொருளடக்கம்

மகாபாரதம் [தொகு]

ஒரு மகன் தன் தந்தை மறுமணம் செய்து கொள்ள வேண்டி தனது சிற்றின்ப நுகர்வையும்,அரசாளும் உரிமையையும் தியாகம்(பீஷ்மர்)செய்கிறான். ஒரு கணவன் தன் மனைவியை இன்னொருவன் மூலமாகக் கருத்தரிக்கச் செய்கிறான்(பாண்டு). ஒரு பெண் தன் கணவன் பார்வையிழந்த நிலைக்காக தானும் கண்களை கட்டிக்கொள்கிறாள்(காந்தாரி). பெண் ஒரு சபையின் நடுவில் துகில் உரியப்படுகிறாள்(திரௌபதி). ஒரு மாணவன்(ஏகலைவன்) சாதியின் காரணமாய் கல்வி மறுக்கப்பட்டும், தகுதி இருந்தும்(கர்ணன்) போட்டிக்கு அனுமதியும் மறுக்கப்படுகிறது. சொத்துக்காக ஒரு குடும்பம்(கௌரவர்கள்,பாண்டவர்கள்) பிரிந்தும், புதிய நகரை உருவாக்க மிகப்பெரிய(காண்டவப்பிரஸ்தம்)காடு அழிக்கப்படுகிறது.

இராமாயணம் [தொகு]


இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்

காண்க [தொகு]

ஆதாரங்கள் [தொகு]

  1. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=211&pno=152

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இதிகாசம்&oldid=1415716" இருந்து மீள்விக்கப்பட்டது