சிவமகாபுராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிவ புராணம் (சமஸ்கிருதம்: शिव पुराण, சிவ புராணா) என்பது பதினெண் புராணங்களில் நான்காவது புராணமாகும். பதினென் புராணங்களின் வரிசையில் சிலர் சிவ புராணத்திற்கு பதிலாக வாயு புராணத்தினை சேர்க்கின்றார்கள்.

புராண வரலாறு[தொகு]

நைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிக்கும் முனிவர்கள் ஒன்றிணைந்து, வருமான சூதமா முனிவரிடம் சிவபெருமானது பெருமைகளை கூறும் படி வேண்டினார்கள். சூதமா முனிவர் வியாஸ மகரிஷியின் சிஷ்யராவர். அவர் கூறிய சிவனது பெருமைகளின் தொகுப்பே சிவ புராணமாகும்.

சோதிர் லிங்க தோற்றம், திருமாலிற்கும் பிரம்மாவிற்கும் வரம் கொடுத்தது, சிவலிங்கத்தின் மகிமை, சிவ பூஜைக்கான விதிமுறைகள், சிவ பூஜை மந்திரங்கள், மன்மதன் எரிப்பு என பல்வேறு சிவபெருமைகளை இந்நூல் கூறுகிறது.

இப்புராண நூலில் சரப புராணம். ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகளை திருமலைநாதர் என்பவர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.

[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=10943 சிவ புராணம்

தொடர்புடையவை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிவமகாபுராணம்&oldid=1464724" இருந்து மீள்விக்கப்பட்டது