தர்மசாத்திரங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தொடரின் ஒரு பகுதி |
| இந்து புனித நூல்கள் |
|---|
|
நூல் பகுப்பு
|
|
காலக்கோடு
|
தர்மசாத்திரங்கள் வடமொழி இந்து இலக்கியங்களில் தர்மம் பற்றி பேசுகின்றன. வேதங்களில் தர்மத்தின் மூலமாய் அமைந்த சுருதிகளை அடிப்படையாகக் கொண்டு சமயக் கடமை, தத்துவங்களைப் பற்றிப் பேசுவதற்கு எழுந்தவையே ஸ்மிருதிகள் இவை மனித வாழ்வுக்குரிய நீதி நியாயங்களை விதிகளாக விளக்கும் நூல் என்றும் பொருள்கொள்ளப்படுகின்றன.
இவற்றின் தோற்றம் பற்றிய காலவரையரையில் தெளிவான குறிப்புக்கள் இல்லாதபோதிலும், குப்தர் காலத்திலேயே அதிகமானவை தோன்றின.
தர்மசாத்திரங்களுள் குறிப்பிடத்தக்கவை
- மனுதர்மசாத்திரம்
- விஷ்ணு ஸ்மிருதி
- போதாயன தர்ம சூத்திரம்
- நாரத ஸ்மிருதி
- சுக்கிர நீதி
- காமாண்டக நீதி சாரம்
- பிரகஸ்பதி ஸ்மிருதி
இவை எழுதியவர்களின் பெயர்களாலேயே வழங்கப்பெறுகின்றன.
இவை பிரதானமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- ஆசார காண்டம்
- வியபார காண்டம்
- பிராயச்சித்த காண்டம்