மனுதரும சாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்துக்கள் வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் மனுதர்ம சாத்திரம் (சமற்கிருதம்: மனுஸ்மிருதி) ஆகும். இதனை மனு எனும் ஞானி தொகுத்தார். தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. மனுநீதிச் சோழன் இதனை முழுமையாகப் பின்பற்றி ஆட்சி செய்ததாக போற்றப்படுகிறான். இந்துதத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர். இது ஆசாரப்பகுதி, விசுவகாரப்பகுதி, பிராயச்சித்தப்பகுதி என மூன்று பகுதிகளைக் கொண்டது.

[தொகு] அத்தியாயங்கள்

மனுதர்ம சாத்திரம் அதன் மூன்று பகுதிகளிலும் 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

  • 1ஆம் அத்தியாயம் - உலகத் தோற்றம், நான்கு வர்ணங்களின் தோற்றம் பற்றி விபரிக்கிறது.
  • 2ஆம் அத்தியாயம் - பிரமச்சாரிய நிலை மற்றும் குருகுல நிலை பற்றி விபரிக்கிறது.
  • 3 முதல் 6ஆம் அத்தியாயம் - பிராமண சத்திரியக் கடமைகள் பற்றி விபரிக்கிறது.
  • 7ஆம் அத்தியாயம் - அரசியல் சிந்தனைகள் பற்றி விபரிக்கிறது.
  • 8 முதல் 10ஆம் அத்தியாயம் - வர்ணம் மாறிய திருமணம், அனுலோகம், பிரதிலோகம் பற்றி விபரிக்கிறது.
  • 11ஆம்12ஆம் அத்தியாயம் - பிராயச்சித்தம், கன்மா, மறுபிறப்பு முக்குணம் பற்றி விபரிக்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மனுதரும_சாத்திரம்&oldid=1064834" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்