திருவாசகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

8 - திருவாசகம், திருக்கோவையார்

மாணிக்க வாசகர்

திருவிசைப்பா ( திருமாளிகைத் தேவர்  • சேந்தனார்  • கருவூர்த் தேவர்  • பூந்துருத்தி நம்பிகாடநம்பி  • கண்டராதித்தர்  • வேணாட்டடிகள்  • திருவாலியமுதனார்  • புருடோத்தம நம்பி  • சேதிராயர் ) திருப்பல்லாண்டு ( சேந்தனார் )

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

ஆலவாய் உடையார்  • காரைக்கால் அம்மையார்  • ஐயடிகள் காடவர்கோன்  • சேரமான் பெருமான்  • நக்கீரர்  • கல்லாடர்  • கபிலர்  • பரணர்  • இளம்பெருமான்  • அதிராவடிகள்  • பட்டணத்தடிகள்  • நம்பியாண்டார்  •

சேக்கிழார்


Portal icon சைவம் வலைவாசல்

திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.

திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரத்தை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.

சிவபுராணம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: சிவபுராணம்

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருவாசகம்&oldid=1704301" இருந்து மீள்விக்கப்பட்டது