ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.

அந்தாதி என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம்

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.

காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.

ஆளுடைய பிள்ளையார் என்பவர் திருஞானசம்பந்தர். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை.

இந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.

நூல் அமைதி[தொகு]

இந்த நூலில் 100 கட்டளைக்கலித்துறைப் பாடல்களும், இறுதியில் ஒரு வெண்பாவும் உள்ளன. 100-ஆவது பாடல் சீர்காழியின் 12 பெயர்களை முதன்முதலாகத் தொகுத்துக் கூறுகிறது.

இறுதியிலுள்ள வெண்பா இந்த நூலின் பெருமையைச் சொல்கிறது.

பாடல் பாங்கு (1)
பார்மண்ட லத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற
நீர்மண்ட லப்படப் பைப்பிர மாபுர நீறணிந்த
கார்மண்ட லக்கண்டத்(து) எண்தடத் தோளன் கருணைபெற்ற
தார்மண்ட லம்அணி சம்பந்தன் மேவிய தண்பதியே.

காலம் கணித்த கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005