விக்கிநூல்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விக்கிநூல்கள் | |
|---|---|
விக்கிநூல்கள் தளத்தின் முகப்புப் பக்கம் |
|
| தொடுப்பு | www.wikibooks.org |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | யாவரும் தொகுக்கக்கூடிய பாடநூல்களும் உரைநூல்களும் |
| பதிவு செய்தல் | விருப்பத்திற்குட்பட்டது |
| கிடைக்கும் மொழிகள்: | பன்மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | கார்ல் விக்கும் விக்கிமீடியா சமூகமும் |
| தொடக்கம் | சூலை 10, 2003 |
| தற்போது | செயல்பாட்டில் உள்ளது |
விக்கிநூல்கள் எனும் இணைய தளமானது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களுள் ஒன்றாகும். இது கட்டற்ற பாடநூல்களையும் உரைநூல் தொகுப்புகளையும் யார் வேண்டுமானாலும் உருவாக்கவோ தொகுக்கவோ வழிவகை செய்யும் ஒரு விக்கி வகையைச் சேர்ந்த தளமாகும். இது 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது பலமொழிகளில் செயல்பட்டு வருகிறது.
இத்தளமானது தமிழ் விக்கிமீடியா திட்டங்களுள் ஒன்றாகும். தற்போது தமிழ் விக்கிநூல்கள் தளத்தில் 400க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளன. சிறுவர்களுக்கான் நூல்களும் கணினியியல் துறைசார் நூல்களும் தொகுப்பில் உள்ளன.