விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2.svg
உரலி www.wikipedia.org
மகுட வாசகம் எவரும் தொகுக்கக்கூடிய கலைக்களஞ்சியம்.
வணிக நோக்கம் இல்லை
தளத்தின் வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்) 275 துடிப்புள்ள பதிப்புகள் (285 முழுமையானது)[1]
பயனர்கள் 35,000,000 (அனைத்துப் பதிப்புக்களிலும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை)[2]
உள்ளடக்க உரிமம் கிரியேட்டிவ் காமன்ஸ்
சுட்டல்/ஒன்றேபோல் பகிர்
(Creative Commons Attribution/
Share-Alike)
3.0

மற்றும் GFDL இரட்டை உரிமம்
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம் (இலாப நோக்கற்ற)
உருவாக்கியவர் ஜிம்மி வேல்ஸ், லாரி சாங்கர்[3]
வெளியீடு சனவரி 15, 2001(2001-01-15)
அலெக்சா நிலை Straight Line Steady.svg 6 (சனவரி 2013)[4]
தற்போதைய நிலை செயல்பாட்டு நிலையில்[5]


விக்கிப்பீடியா ( /ˌwɪkɪˈpdiə/ அல்லது /ˌwɪkiˈpdiə/ WIK-i-PEE-dee-ə) என்பது இலாப நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் 50000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்த கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும் இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும்.[6] மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.[7][8] மே 2013 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது. இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும் அதிக பிரபலமானதுமாகும்.[9][10][11][12] மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளாவிய ரீதியில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.[9][13]

விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001ல் ஆரம்பிக்கப்பட்டது.[14] சாங்கர் விக்கிப்பீடியா என்ற சொல்லை,[15] விக்கி (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய் மொழியில் "விரைவு" எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)[16] மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார். 2006ல், டைம் சஞ்சிகை, உலகளாவிய ரீதியில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் துரித வளர்ச்சிக்கு யூரியூப், மைஸ்பேஸ் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு மேலதிகமாக விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது.[17]விக்கிப்பீடியா ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப் படுகிறது. இதற்குக் காரணம், முக்கிய செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.[18][19][20]

விக்கிப்பீடியாவின் திறந்த பாங்கு பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. இவற்றுள் கட்டுரைகளின் தரம்,[21] தேவையற்ற தொகுப்புக்கள்[22][23] மற்றும் தகவல்களின் துல்லியத்தன்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில கட்டுரைகள் உறுதிப்படுத்தப்படாத அல்லது முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தாலும்,[24] நேச்சர் இதழ் மூலம் 2005ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், இதிலுள்ள விஞ்ஞானக் கட்டுரைகள் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் கட்டுரைகளைப் போல் துல்லியத்தன்மை கொண்டன எனக் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டிலும் முக்கிய தவறுகள் ஒரேயளவினதாய் இருந்தன.[25] இதற்குப் பதிலளிக்குமுகமாக, பிரிட்டானிக்கா இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும் முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத் தெரிவித்தது.[26] எனினும் இதனை மறுத்துரைத்த நேச்சர், தனது தரப்பில் இதற்கான முறையான அறிக்கையையும் பிரிட்டானிக்காவின் முக்கிய மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும் வெளியிட்டது.[27]

வரலாறு [தொகு]

விக்கிப்பீடியா திட்டம் ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணைய தொடர்பையும் உலாவியையும் மட்டும் பயன்படுத்தி தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது.

அனைத்து மனித அறிவும் கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம். இத் திட்டம் இலாப நோக்கமற்றது, பக்க சார்பற்றது, நடுநிலைமையை வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும் கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது

இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 12,000,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது 200 இற்கு மேற்பட்ட மொழிப் பதிப்புக்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில் தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் இடம் பெற்றவண்ணமுள்ளன. 14 மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.

விக்கிப்பீடியாவின் இயல்புகள் [தொகு]

எவரும் எழுதலாம் என்பதே விக்கிப்பீடியாவின் சுலோகமாகும். புறவய நோக்கில், தகவல் சரிபார்க்கும் வண்ணம் ஆதாரங்கள் தந்து, நடுநிலைமையுடன் எழுத வேண்டும் என்பது விக்கிப்பீடியாவின் கொள்கை.

கட்டற்ற, இலவச உள்ளடக்கம் [தொகு]

விக்கிப்பீடியாக் கட்டுரைகள் யாவும் பதிப்புரிமை கைவிடப்பட பதிப்புரிமை மூலம் இற்றைப்படுத்தப்படுகின்றது. குனூ கட்டற்ற ஆவண உரிமத்திற்கு ஏற்ப இங்கு அடங்கிய அனைத்து உள்ளடக்கங்களையும் யாரும் இலவசமாக பயன்படுத்தலாம்.

மென்பொருளும் வன்பொருளும் [தொகு]

விக்கிப்பீடியா ஒரு விநாடிக்கு 2000க்கும் மேலான வேண்டுதல்களை பெறுகிறது. 100க்கும் மேலான வழங்கிகள் இதனை நிறைவேற்ற அமைக்கப்பட்டிருக்கின்றன.

விக்கிப்பீடியா கட்டற்ற விக்கிமீடீயா மென்பொருளில் இயங்குகிறது. இது பி.எச்.பி, மைசீக்குவல் ஆகிய இணைய நிரல் மொழிகளால் எழுதப்பட்டது. இவற்றோடு எச்.டி.எம்.எல், சி.எசு.எசு ஆகியவற்றையும் பக்கங்களை வடிவமைக்க பயன்படுத்துகிறது.

விக்கிப்பீடியா ஒரு தனி வழங்கியில் 2004 வரை இயங்கி வந்தது. அதன் பின்னர் பல்நிலை வழங்கி கட்டமைப்புக்கு விக்கிப்பீடியா மாற்றப்பட்டது. தற்போது 100 மேற்பட்ட வழங்கிகள், உலகின் நான்கு பகுதிகளில் விக்கிப்பீடியாவை வழங்குகின்றன.

மொழிப்பதிப்புக்கள் [தொகு]

தமிழ் விக்கிப்பீடியா [தொகு]

முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003 ஆம் ஆண்டு ஆரம்பமானது. தற்போது இதில் 53,583 கட்டுரைகள் உள்ளன. 51,571 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள் [தொகு]

  1. name=en:ListOfWikipedias
  2. Grand Total. Wikimedia.org. June 10, 2012. Retrieved June 11, 2012.
  3. Jonathan Sidener. "Everyone's Encyclopedia". The San Diego Union-Tribune. http://www.signonsandiego.com/uniontrib/20041206/news_mz1b6encyclo.html. Retrieved 2006-10-15. 
  4. "Wikipedia.org Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2013-1-5.
  5. "Wikipedia:Wikipedia is a work in progress". Wikipedia. பார்த்த நாள் 2008-07-03.
  6. "Wikipedia's Jimmy Wales Speaks Out On China And Internet Freedom". Huffington Post. http://www.huffingtonpost.co.uk/2011/08/29/wikipedias-jimmy-wales-sp_n_941239.html. Retrieved September 24, 2011. "Currently Wikipedia, Facebook and Twitter remain blocked in China" 
  7. "Technology can topple tyrants: Jimmy Wales an eternal optimist". Sydney Morning Herald. November 7, 2011. http://m.smh.com.au/technology/technology-news/technology-can-topple-tyrants-jimmy-wales-an-eternal-optimist-20111107-1n387.html. Retrieved May 8, 2012. 
  8. உள்ளகப் புள்ளிவிபரங்களின்படி, ஏப்பிரல் 2011 வரையில், 1.3 மில்லியனுக்கும் அதிகமான தொகுப்பாளர்கள் (தமது வருகையிலிருந்து குறைந்தபட்சம் 10 தொகுப்புக்களைச் செய்த விக்கிப்பீடியர்கள்) உள்ளனர். "Wikipedia Statistics – Table – Contributor". April 30, 2012. http://stats.wikimedia.org/EN/TablesWikipediansContributors.htm. Retrieved May 27, 2012. 
  9. 9.0 9.1 "Five-year Traffic Statistics for Wikipedia.org". Alexa Internet. பார்த்த நாள் May 24, 2011.
  10. Bill Tancer (May 1, 2007). "Look Who's Using Wikipedia". Time. http://www.time.com/time/business/article/0,8599,1595184,00.html. Retrieved December 1, 2007. "The sheer volume of content [...] is partly responsible for the site's dominance as an online reference. When compared to the top 3,200 educational reference sites in the U.S., Wikipedia is No. 1, capturing 24.3% of all visits to the category"  Cf. Bill Tancer (Global Manager, Hitwise), "Wikipedia, Search and School Homework", Hitwise: An Experian Company (Blog), March 1, 2007. Retrieved December 18, 2008.
  11. Alex Woodson (July 8, 2007). "Wikipedia remains go-to site for online news". Reuters. http://www.reuters.com/article/internetNews/idUSN0819429120070708. Retrieved December 16, 2007. "Online encyclopedia Wikipedia has added about 20 million unique monthly visitors in the past year, making it the top online news and information destination, according to Nielsen//NetRatings." 
  12. "Top 500". Alexa. பார்த்த நாள் October 13, 2009.
  13. Wikipedia's Evolving Impact, by Stuart West, slideshow presentation at TED2010
  14. Mike Miliard (March 1, 2008). "Wikipediots: Who Are These Devoted, Even Obsessive Contributors to Wikipedia?". Salt Lake City Weekly. http://www.cityweekly.net/utah/article-5129-feature-wikipediots-who-are-these-devoted-even-obsessive-contributors-to-wikipedia.html. Retrieved December 18, 2008. 
  15. How I started Wikipedia, presentation by Larry Sanger
  16. "wiki" in the Hawaiian Dictionary, Revised and Enlarged Edition, University of Hawaii Press, 1986
  17. Grossman, Lev (December 13, 2006). "Time's Person of the Year: You". Time (Time, Inc). http://www.time.com/time/magazine/article/0,9171,1569514,00.html. Retrieved December 26, 2008. 
  18. Jonathan Dee (July 1, 2007). "All the News That's Fit to Print Out". The New York Times Magazine. http://www.nytimes.com/2007/07/01/magazine/01WIKIPEDIA-t.html. Retrieved December 1, 2007. 
  19. Andrew Lih (April 16, 2004). "Wikipedia as Participatory Journalism: Reliable Sources? Metrics for Evaluating Collaborative Media as a News Resource" (PDF). 5th International Symposium on Online Journalism (University of Texas at Austin). http://jmsc.hku.hk/faculty/alih/publications/utaustin-2004-wikipedia-rc2.pdf. Retrieved October 13, 2007. 
  20. Mossop, Brian (August 10, 2012). "How Wikipedia Won Olympic Gold". Wired. பார்த்த நாள் 2012-07-05.
  21. "Wikipedia:About – Wikipedia, the free encyclopedia". English Wikipedia. பார்த்த நாள் 2012-07-05.
  22. Fernanda B. Viégas, Martin Wattenberg, and Kushal Dave (2004). "Studying Cooperation and Conflict between Authors with History Flow Visualizations" (PDF). Proceedings of the ACM Conference on Human Factors in Computing Systems (CHI) (Vienna, Austria: ACM SIGCHI): 575–582. doi:10.1145/985921.985953. ISBN 1-58113-702-8. http://alumni.media.mit.edu/~fviegas/papers/history_flow.pdf. Retrieved January 24, 2007. 
  23. Reid Priedhorsky, Jilin Chen, Shyong (Tony) K. Lam, Katherine Panciera, Loren Terveen, and John Riedl (GroupLens Research, Department of Computer Science and Engineering, University of Minnesota) (November 4, 2007). "Creating, Destroying, and Restoring Value in Wikipedia" (PDF). Association for Computing Machinery GROUP '07 conference proceedings (Sanibel Island, Florida). http://www-users.cs.umn.edu/~reid/papers/group282-priedhorsky.pdf. Retrieved October 13, 2007. 
  24. Ahrens, Frank (July 9, 2006). "Death by Wikipedia: The Kenneth Lay Chronicles". The Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/07/08/AR2006070800135.html. Retrieved November 1, 2006. 
  25. Jim Giles (December 2005). "Internet encyclopedias go head to head". Nature 438 (7070): 900–901. doi:10.1038/438900a. பப்மெட் 16355180. Bibcode2005Natur.438..900G. http://www.nature.com/nature/journal/v438/n7070/full/438900a.html.  The study (that was not in itself peer reviewed) was cited in several news articles, e.g.,
  26. Fatally Flawed: Refuting the recent study on encyclopedic accuracy by the journal Nature Encyclopædia Britannica, Inc., March 2006
  27. "Nature's responses to Encyclopaedia Britannica". Nature (March 30, 2006). பார்த்த நாள் 2012-03-19.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா&oldid=1427622" இருந்து மீள்விக்கப்பட்டது