பி.எச்.பி
| நிரல்மொழி வகை: | imperative, பொருள் நோக்கு நிரலாக்கம் |
|---|---|
| தோன்றிய ஆண்டு: | 1995 |
| உருவாக்குநர்: | ராஸ்மஸ் லெடார்ஃ |
| வளர்த்தெடுப்பு: | The PHP Group |
| மிக அண்மைய வெளியீடு: | 5.4.0 / மார்ச்சு 1 2012 |
| Typing discipline: | Dynamic, weak |
| முதன்மைப் பயனாக்கங்கள்: | {{{நடைமுறைப்படுத்துவோர்கள்}}} |
| பிறமொழித்தாக்கங்கள்: | சி, பெர்ள், ஜாவா, சி++, C#, Python |
| இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்: | Php4delphi |
| இயக்குதளம்: | Cross-platform |
| அனுமதி: | PHP License |
| இணையத்தளம்: | http://php.net/ |
பி.எச்.பி (PHP: Hypertext Preprocessor) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொது நோக்க சேவையக படிவ நிரலாக்க மொழி. இது இணைய நிரலாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டு நிகழ்நிலை (Dynamic) இணைய பக்கங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களை மீப்பாடக் குறிமொழியிலான (HTML) பக்கங்களுக்குள்ளேயே பொதிந்து விடலாம். பி.எச்.பி இணைய பக்கங்கள் வலை சேவையகத்தால் (Web Server) செயலி தொகுதியின் (Processor Module) உதவியுடன் மொழிப்பெயர்க்கப் படுகின்றது. மேலும் இது கட்டளை நிரல் இடைமுகப்பை தன்னகத்தே கொண்டு தனித்தியங்கும் வரைகலை பயன்பாடுகளில் பயன்படுகின்றது. பி.எச்.பி பெரும்பான்மையான வலை சேவையகங்கள் மற்றும் இயங்கு தளங்களில் இலவசமாக நிறுவி பயன்படுத்த வல்லது. இது மட்டுமின்றி, பி.எச்.பி மைக்ரோசாப்ட் ஆக்டிவ் சர்வர் பேஜஸ் சேவையக படிவ நிரலாக்க மொழி மற்றும் இதையொத்த நிரலாக்க மொழிகளுக்கு போட்டியாக விளங்குகிறது. பி.எச்.பி 20 மில்லியன்கள் இணைய தளங்களிலும், 1 மில்லியன் வலை சேவையகங்களிலும் நிறுவி பயன்படுத்தப் படுகின்றது
பி.எச்.பியை முதன் முதலில் ராஸ்மஸ் லெடார்ஃ 1995 ஆம் ஆண்டு உருவாக்கினார்.பிறகு பி.எச்.பியின் முக்கிய செயல்பாடுகள் The PHP Group ஆல் கட்டமைக்கப்பட்டது.
பி.எச்.பி முதலில் "Personal Home Page" என்றழைக்கப்பட்டது. இப்போது "PHP: Hypertext Preprocessor" என்று சுழல்நிலை சுருக்கமாக (recursive acronym) அழைக்கப்படுகின்றது..
பொருளடக்கம் |
பயன்பாடு [தொகு]
பி.எச்.பி திறந்த மூல நிரல் மொழியாகும். மூன்று வகைகளில் இதனை உபயோகப்படுத்தமுடியும்.
- இணையதளம் அமைப்பதற்கு
- மேசைக்கணினி பயன்பாடுகள் உருவாக்குவதற்கு
- கட்டளை நிரல்கள் உருவாக்குவதற்கு
இணைய தளம் அமைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் உலாவியும் இணணய வழங்கியும் சேர நிகழ்நிலை (டயனமிக்) இணைய பக்கங்கள் உருவாக்க முடியும்.
பிஎச்பி மடிக்கணினி கருவிகள் உருவாக்குவதற்கு இலகுவானதும் அல்ல பரிந்துரைக்கப்படுவதுமில்லை.
பரவலாக பிஎச்பிக்கு மைசீக்குவல் தரவுதளமாகப் பயன்படுத்தப் படுகிறது.
மொழிச் சூழல் [தொகு]
வெளியீடுகள் [தொகு]
சூன் 1, 2007 அன்று பி.எச்.பி 5.2.3 வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பொருள் நோக்கு நிரலாக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இதில் மைசீக்குவல் நிரகம் இணைக்கப்படவில்லை. இதை தனியாக நிறுவிக் கொள்ளவேண்டும்.
தரவிறக்கம் [தொகு]
பி.எச்.பியை தானியங்கி முறையிலும், சுயமாகவும் (=manual) நிறுவ முடியும். விண்டோஸில் நிறுவுவதற்கென தனி exe ஐ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒருங்கிணைந்த சூழல்/தொகுப்பி [தொகு]
Eclipse, Dreamweaver போன்று பல தொகுப்பிகள் பி.எச்.பி யை ஏதுவாக்குகின்றன. DzSoft PHP தொகுப்பி நல்ல வணிக தொகுப்பி ஆகும்.
பி.எச்.பி யும் எச்.டி.எம்.எல் உம் [தொகு]
பி.எச்.பிக்குள் எச்.டி.எம்.எல் [தொகு]
பல இடங்களில் பி.எச்.பி பின் தள செயற்பாடுகளுக்கும், எச்.டி.எம்.எல், யாவாசிகிரிட்டு, சி.எசு.எசு முன் தள வடிவமைப்பு/செயறபாட்டுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. php கோப்பில் பின்வருமாறு எச்.டி.எம்.எல் ச் சேக்கலாம்.
<?php பி.எச்.பி.... ?> இங்கு எச்.டி.எம்.எல் பி.எச்.பி மாறிலிகளை <?php echo $var ?> என்று எச்.டி.எம்.எல் இல் சேக்கலாம். <?php பி.எச்.பி... ?>
எச்.டி.எம்.எல் உள் பி.எச்.பி [தொகு]
<html> <head> </head> <body> <?php echo "Hello!"; ?> </body> </html>
பி.எச்.பி இல் தமிழ் [தொகு]
சில தொகுப்புகள் தமிழ் சரங்களை சரிவர காட்டா. ஒருங்குறி ஏதுவாக்கப்பட்ட தொகுப்பிகளே பி.எச்.பியை சரிவரக் காட்டும். xampp நிறுவி எளிய தமிழில் பி.எச்.பி என்ற செய்முறையில் சென்ன மாதிரி செய்தால், தமிழை பி.எச்.பியில் பயன்படுத்தலாம்.
மொழி அமைப்பு [தொகு]
உலகே வணக்கம் [தொகு]
<?php print "Hello World!"; ?>
Hello World!
தரவு இனங்கள் [தொகு]
பி.எச்.பி மொழியில் ஐந்து தரவு இனங்கள் பரலாக பயன்படுகின்றன.
- திசையிலிகள் (scalars) - $foo_scalar = "john";
- அணி (array) - $foo_array = array("item1", "item2", "item3");
- hash - $foo_hash = array( 'key1'=>"value1", 'key2'=>"value2", 'key3'=>"value3" );
- கோப்பு
கட்டுப்பாடு (Control Flow) [தொகு]
எனில்/if [தொகு]
$selection="ta"; if ($selection=="hi") echo "You have selected the Hindi Wikipedia"; elseif ($selection=="ta") echo "You have selected the Tamil Wikipedia"; else echo "You have selected the English Wikipedia";
You have selected the Tamil Wikipedia
தெரிவு/Switch [தொகு]
$selection = "hi"; switch ($selection) { case "ta": echo "You have selected Tamil Wikipedia"; break; case "hi": echo "You have selected Hindi Wikipedia"; break; default: echo "You have selected English Wikipedia"; }
You have selected Hindi Wikipedia
சுற்று [தொகு]
while சுற்று [தொகு]
<?php $i=1; while($i<=5) { echo "The number is " . $i . "<br />"; $i++; } ?>
The number is 1 The number is 2 The number is 3 The number is 4 The number is 5
for சுற்று [தொகு]
<?php for ($i=1; $i<=5; $i++) { echo "Iteration:".$i." Hello World!<br />"; } ?>
Iteration:1 Hello World! Iteration:2 Hello World! Iteration:3 Hello World! Iteration:4 Hello World! Iteration:5 Hello World!
foreach சுற்று [தொகு]
<?php $set = array(10, 20, 30, 40); foreach ($set as $val) { echo $val * 10; echo "<br />"; }
100 200 300 400
செயலி [தொகு]
<?php function add($a, $b) { $total = $a + $b; return $total; } echo "The total is:".add(56, 44); ?>
The total is:100
கோப்பை கையாளுதல் [தொகு]
கோப்பை வாசித்தல் [தொகு]
$fh = fopen("C:\welcome.txt", "r") or exit("Unable to open file!"); while(!feof($fh)) { echo fgets($fh). "<br />"; } fclose($fh);
கோப்பில் எழுதுதல்/இணைத்தல் [தொகு]
$fh = fopen("C:\welcome.txt", "a") or exit("Unable to open file!"); fwrite($fh, "This info is appended to the file."); fclose($fh);
சுருங்குறித்தொடர் [தொகு]
<?php $subject = "Test Test 1"; $pattern = "/\w+\s\w+\s\d+$/"; if (preg_match($pattern, $subject)) { echo "Yes, A Match"; } else { echo "Not A Match"; } ?>
Yes, A Match
தரவுத்தளத்தோடு பி.எச்.பி [தொகு]
Syntax மட்டுமே:
<?php // Connect to db $dbhost = 'server.com'; $username = 'user1'; $password = 'dfs234.2'; $database = 'Accounts'; $dbconnect = mysql_connect($dbhost, $username, $password) or die ('Error connecting to mysql'); mysql_select_db($database); //Print "Connection Status: $dbconnect"; $isbn_array = array (); // Get data from query $query = "select employees from Accounts"; $result = mysql_query($query_preview); //Testing the returned data if (!$result) { echo "Could not successfully run query ($query_order_latest) from DB: " . mysql_error(); } elseif (mysql_num_rows($result) == 0) { echo "No rows found, nothing to print."; } elseif (mysql_num_rows($result) > 0){ while($row_order = mysql_fetch_assoc($result_preview)){ array_push($data_array, $row_order ['employee']); // This array contains all the employees in the db } } // End query check mysql_close($dbconnect);
பி.எச்.பி இல் பொருள் நோக்கு நிரலாக்கம் [தொகு]
பி.எச்.பி இல் பொருள் நோக்கு நிரலாக்கம் செய்ய முடியும். ஒரு எளிய எடுத்துக்காட்டு கீழே. இந்த எடுத்துக்காட்டில் var, $this ஆகியவை keywords என்பது குறிப்பிடத்தக்கது.
<?php include("C:\Documents and Settings\HP_Owner\Desktop\calc.php"); $c1 = new Calculator; $c1->set_numbers(1,3); echo "This sum is: ".$c1->sum()."<br />"; echo "The multiple is: ".$c1->mul(); ?>
This sum is: 4 The multiple is: 3
- calc.php கோப்பு
<?php class Calculator { //class-wide variables var $x; var $y; //function to gather two numbers function set_numbers($num1, $num2){ $this->x = $num1; $this->y = $num2; } //function to add numbers together function sum(){ $ans = $this->x + $this->y; return $ans; } //function to multiply the numbers function mul(){ $ans = $this->x * $this->y; return $ans; } } ?>
இவற்றையும் பாக்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- PHP எப்படி வேலை செய்கிறது ? - (தமிழில்)
- PHP யின் அடிநிலை இலக்கணம் - (தமிழில்)
- PHP வினைக்குறி - (தமிழில்)
- PHP சரங்கள் - (தமிழில்)
- பி.எச்.பி. டொட் நெற் - (ஆங்கிலத்தில்)
- PHP Tutorial - (ஆங்கிலத்தில்)
- 50 Extremely Useful PHP Tools - (ஆங்கிலத்தில்)
- php builder - (ஆங்கிலத்தில்)
- tizag php - (ஆங்கிலத்தில்)