ஆள்களப் பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆள்களப் பெயரின் வேறுபட்ட நிலைகள்

ஆள்களப் பெயர் (ஆங்கிலம்: Domain Name) என்பது இணையத்தில் நிருவாக அதிகாரம், கட்டுப்பாடு என்பனவற்றை வரையறுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட சரம் ஆகும். களப் பெயர் முறைமையின் விதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆள்களப் பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.[1] com, net, org மற்றும் நாடுகளுக்கான இணைய ஆள்களப் பெயர்கள் முதல் நிலை ஆள்களப் பெயர்களாகும்.[2]

நோக்கம்[தொகு]

மனிதர்கள் வலைக் கடப்பிடங்களின் பெயர்களை இலகுவாக நினைவில் வைத்திருப்பதற்கு ஆள்களப் பெயர்கள் உதவுகின்றன. புரவன் பெயரையும் ஆள்களப் பெயரையும் இணைத்து இணையத்தள முகவரிகள் உருவாக்கப்படுகின்றன. புரவன் பெயர் உரலியில் ஒரு பகுதியாகக் காணப்படும் (உ-ம்: தளம்.ஆள்களமையம்.இலங்கை).[3]

வரலாறு[தொகு]

களப் பெயர் முறைமை 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[4]

ஆள்களப் பெயர் வெளி[தொகு]

இன்று இணைய ஆள்களப் பெயர் வெளியை ஐ.சி.ஏ.என்.என். என்ற நிறுவனம் கட்டுப்படுத்துகின்றது.[5]

ஆள்களப் பெயர் தொடரியல்[தொகு]

ஆள்களப் பெயர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கும். அவற்றினிடையே தளம்.ஆள்களமையம்.இலங்கை என்றவாறு புள்ளிகள் பயன்படுத்தப்படும்.

  • வலப்புறத்திலுள்ள பகுதி முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும். உதாரணமாக, தளம்.ஆள்களமையம்.இலங்கை என்பதில் .இலங்கை என்பது இலங்கைக்கான முதல் நிலை ஆள்களப் பெயரைக் குறிக்கும்.
  • உப ஆள்களப் பெயர்கள் முதல் நிலை ஆள்களப் பெயருக்கு வலப்புறத்தில் இருக்கும்.[6]

முதல் நிலை ஆள்களப் பெயர்கள்[தொகு]

com, net, org போன்ற முதல் நிலை ஆள்களப் பெயர்கள் இணையத்திலுள்ள ஆள்களப் பெயர்களுள் உயர் நிலையில் உள்ளவையாகும்.[7] நாடுகளுக்கான முதல் நிலை ஆள்களப் பெயர்கள் ஐ. எசு. ஓ.-3166இற்கேற்ப ஆங்கிலத்தில் இரண்டு வரியுருக்களில் அமைந்திருக்கும்.[8] தற்போது இலங்கை, இந்தியா என்றவாறு தமிழ் மொழியிலும் ஏனைய மொழிகளிலும் ஆள்களப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.[9]

சர்வதேசமயப்படுத்தப்பட்ட ஆள்களப் பெயர்கள்[தொகு]

களப் பெயர் முறைமையானது அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, ஒருங்குறியில் அமைந்த இணையத்தள முகவரிகள் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறைக்கு மாற்றப்படும். உதாரணமாக தளம்.ஆள்களமையம்.இலங்கை என்பது xn--rlcuo9h.xn--wkc4axeaevb3oqbg.xn--xkc2al3hye2a என்று மாற்றப்பட்டுள்ளது.

ஆள்களப் பெயர் பதிவு[தொகு]

வரலாறு[தொகு]

முதலாவது வர்த்தகம் சார்ந்த ஆள்களப் பெயரான symbolics.com என்பது சிம்பாலிக்ஸ் நிறுவனத்தால் 1985ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது.[10]

நிருவாகம்[தொகு]

ஆள்களப் பெயர் பதிவானது ஐ. சி. ஏ. ஏ. என். என்னும் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. களப் பெயர் முறைமைச் சிட்டைகள், பெயர்கள் மற்றும் தொடரியல் விதிகள் (ஆங்கிலத்தில்)
  2. முதல் நிலை ஆள்களப் பெயர்கள் பட்டியல் (ஆங்கிலத்தில்)
  3. ஓர் உரலியின் பகுதிகள் (ஆங்கிலத்தில்)
  4. பால் மோகபெட்ரிஸ் (ஆங்கிலத்தில்)
  5. ஐ. சி. ஏ. என். என். என்ன செய்கிறது (ஆங்கிலத்தில்)?
  6. உப ஆள்களப் பெயர் என்றால் என்ன? ஓர் உப ஆள்களப் பெயரை எப்படி உருவாக்குவது (ஆங்கிலத்தில்)?
  7. முதல் நிலை ஆள்களப் பெயர்கள் என்றால் என்ன (ஆங்கிலத்தில்)?
  8. நாடுகளின் பெயர்களும் பரிபாடை மூலகங்களும் (ஆங்கிலத்தில்)
  9. இலங்கை ஆள்களப் பதிவகம் (தமிழில்)
  10. Symbolics.com (ஆங்கிலத்தில்)
  11. இணையத்தில் ஐ. சி. ஏ. என். என்.னின் பங்கினதும் வேலையினதும் விளைவு என்ன (ஆங்கிலத்தில்)?
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆள்களப்_பெயர்&oldid=1508375" இருந்து மீள்விக்கப்பட்டது