முக்குணங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்குணங்கள் என்பது சாத்வீகம், இராட்சதம், தாமசம் என்பவற்றைக் குறிப்பதாகும். இந்தியத் தத்துவவாதிகள் பொதுவாக முக்குணங்கள் பற்றிக் கூறுவர். சாத்வீகம் வெள்ளை நிறத்தையும், இராட்சதம் சிவப்பு நிறத்தயும், தாமசம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும் என்பர். இக் குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது பொதுவான கருத்து. சாங்கியர்கள் முக்குணங்களின் சேர்க்கையினாலேயே உலகமானது உருவாகியது என்பர்.