வங்காளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வங்காளம் Bengal |
|
| பெரிய நகரம் | கொல்கத்தா |
| முக்கிய மொழி | வங்காள மொழி |
| பரப்பளவு | 232,752 km² |
| மக்கள் தொகை (2001) | 209,468,404[1] |
| அடர்த்தி | 951.3/km²[1] |
| இணையத்தளங்கள் | bangladesh.gov.bdand wbgov.com |
வங்காளம் (Bengal, வங்காள மொழி: বঙ্গ Bôngo, বাংলা Bangla, বঙ্গদেশ Bôngodesh அல்லது বাংলাদেশ Bangladesh), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பிரதேசம். இன்று இப்பிரதேசம் தனிநாடான வங்காள தேசம் (முன்னர் கிழக்கு வங்காளம் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் என்று அறியப்பெற்றது), இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட மேற்கு வங்கம் என இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வங்காளத்தில் சிறிய பகுதிகள் மற்றைய இந்திய மாநிலங்களான பீகார், திரிபுரா, மற்றும் ஒரிசா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. வங்காளத்தின் பெரும்பாலானோர் வங்காள மக்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வங்காள மொழியை முதல்மொழியாகப் பேசுகின்றனர்.
குறிப்புகள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Provisional Population Totals: West Bengal". Census of India, 2001. Office of the Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 2006-08-26.
