மார்கழி உற்சவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கழி உற்சவம் இது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயிகளில் நடைபெறும் விழாவாகும்.
மக்கள் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது நீராடி அவரவர் விருப்ப ஆலயங்களில் இறைவனைத் துதித்து வழிபடுவர்.
திருப்பாவை உற்சவம் [தொகு]
வைணவ தலங்களில் ஆண்டாள் பாசுரங்களை பாராயணம் செய்வர். மார்கழி மாதத்தில் ஏகாதசி திதி அன்று வைகுண்ட ஏகாதசி என்கின்ற ஒரு உற்சவம் நடைபெறும். மார்கழி நீராட்ட பகல்பத்து, இராப்பத்து உற்சவம், மார்கழி 27ம் நாள் மற்றும் கூடாரைவல்லி எனும் கோயில் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கும் உற்சவம் நடைபெறும்.
திருவெம்பாவை உற்சவம் [தொகு]
சிவ தலங்களில் திருவெம்பாவை பாசுரங்களை பாராயணம் செய்வர். மார்கழி திருவாதிரை அன்று ஆரூத்ரா தரிசனம் , படியளத்தல் விழா நடைபெறும்.