தாமரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெலும்போ நுசிபேரா
நெலும்போ நுசிபேரா (Nelumbo nucifera) பூவும் இலைகளும்
நெலும்போ நுசிபேரா (Nelumbo nucifera) பூவும் இலைகளும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: Proteales
குடும்பம்: நெலும்போனேசியே
பேரினம்: நெலும்போ
இனம்: நெ. நுசிபேரா'
இருசொற்பெயர்
நெலும்போ நுசிபேரா
Gaertn.

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

புனிதத் தாமரை (Sacred Lotus)
தோசான் சியோவொன் (Dosan Seowon) என்னுமிடத்திலுள்ள தென் கொரிய நீர்ப் பூங்காவில் காணப்படும் ஒரு தாமரை.

பொருளடக்கம்

[தொகு] சொற்பிறப்பு

தேவநேயப் பாவாணர், தும் - துமர் - தமர் - தமரை - தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார். தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம்.ஆகையால், தாமரை எனும் சொல் செம்முளரியைக் குறிக்கும் என்றும் அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத்தாமரைப்பூவையும் குறிக்குமாறு பொதுப் பொருளில் வழங்குகின்றது என்றும் கூறுகிறார். [1]

[தொகு] தாமரைத் தடாகம்

  • தடாகம் என்பது ஒரு நீர் நிலையாகும். தடாகத்தில், குறிப்பாக தாமரைச் செடிகள் வளரும்.
தாமரைத் தடாகம் தாமரைத் தடாகம்
தாமரைத் தடாகம்
தாமரைத் தடாகத்தில் செந்தாமரைப்பூ

[தொகு] தாமரைப்பூக்கள்

தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும்.

தாமரைப்பூவில் முக்கியமான நிறங்கள் ---

  • வெண்தாமரை --- வெள்ளை நிறத்தில் உள்ள வெள்ளைத் தாமரை மலர்.
  • செந்தாமரை --- சிவப்பு நிறத்தில் உள்ள சிவப்புத் தாமரை மலர்.

[தொகு] செந்தாமரைப் பூக்கள்

செந்தாமரைப் பூக்கள் செந்தாமரைப் பூக்கள்
செந்தாமரை மலரில் தேனீ
செந்தாமரைப் பூ
எட்டுத் தாமரை மொட்டுக்கள்
செந்தாமரைப் பூ

[தொகு] வெண்தாமரைப் பூக்கள்

வெண்தாமரைப் பூக்கள் வெண்தாமரைப் பூக்கள்
வெண்தாமரைப் பூ
வெண்தாமரைப் பூ

[தொகு] வாழை மொட்டும் தாமரை மொட்டும்

வாழை மொட்டு தாமரை மொட்டு
பொற்றாமரை வாழை மொட்டு (GOLDEN LOTUS BANANA Bud)
செந்தாமரையின் மொட்டு கட்டவிழும் முன்

[தொகு] மேற்கோள்கள்

  1. ஞா. தேவநேயப்பாவாணர், தமிழர் வரலாறு நூல் 1,பக் 50
"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88&oldid=913846" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்