நியாசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நியாசின்
Niacin structure.svg
Niacin-3D-balls.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 59-67-6
பப்கெம் 938
EC number 200-441-0
DrugBank DB00627
en:KEGG D00049
ம.பா.த Niacin
ChEBI CHEBI:15940
வே.ந.வி.ப எண் QT0525000
ATC code C04AC01,C10AD02
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
Beilstein Reference 109591
Gmelin Reference 3340
3DMet B00073
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C6NH5O2
மோலார் நிறை 123.1094 g mol-1
தோற்றம் வெண்ணிற ஒளிகசியும் படிகங்கள்
அடர்த்தி 1.473 கி செமீ -3
உருகுநிலை

237 °C, 510 K, 458 °F

நீரில் கரைதிறன் 18 கி லி-1
காடித்தன்மை எண் (pKa) 2.201
காரத்தன்மை எண் (pKb) 11.796
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4936
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.1271305813 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-344.9 kJ mol-1
Std enthalpy of
combustion
ΔcHo298
-2.73083 MJ mol-1
தீநிகழ்தகவு
EU classification வார்ப்புரு:Hazchem Xi
NFPA 704

NFPA 704.svg

1
1
0
 
R-phrases வார்ப்புரு:R36/37/38
S-phrases S26, S36
தீபற்றும் வெப்பநிலை 193 °செ
தானே தீபற்றும்
வெப்பநிலை
365 °செ
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

நியாசின் (Niacin) என்னும் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: C6H5NO2. இது, உயிர்ச்சத்து பி3, நிகோடினிக் அமிலம் மற்றும் விட்டமின் பிபி என்றும் அழைக்கப்படுகிறது. நியாசின், மனிதர்களுக்கு ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும்.

உணவில் நாள்பட்ட நியாசின் குறைபாட்டினால் உருவான பெலாகிரா நோயுற்ற மனிதன்

நம் உணவில் ஐந்து விட்டமின்களின் (நியாசினையும் சேர்த்து) அளவு குறைபடுவது பரவலான ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்களுக்குக் காரணமாகிறது: நியாசின் குறைபாடு (தோல் வறட்சி, பெலாகிரா), உயிர்ச்சத்து சி குறைபாடு (அரிநோய்; ஸ்கர்வி), தயமின் குறைபாடு (பெரிபெரி), உயிர்ச்சத்து டி குறைபாடு (என்புருக்கி நோய்) மற்றும் உயிர்ச்சத்து ஏ குறைபாடு (மாலைக்கண் மற்றும் பிற நோயறிகுறிகள்).

நீரில் கரையகூடிய வெண்திண்மமான நியாசின், கார்பாக்சில் (COOH) தொகுதியை மூன்றாமிடத்தில் கொண்ட பிரிடின் கிளைப்பொருளாகும். உயிர்ச்சத்து பி3-யின் பிற வடிவங்கள்: கார்பாக்சில் தொகுதிக்கு பதிலாக கார்பாக்சமைட் (CONH2) தொகுதியினைக் கொண்ட இதன் அமைடு வடிவமான நிகோடினமைட் (நியாசினமைட்), பிற சிக்கலான அமைடுகள் மற்றும் பல்வேறு மணமியங்கள். ஒத்த உயிரிவேதிப் பண்புகளைக் கொண்டுள்ளதால் இக்குடும்பச் சேர்மங்கள், நியாசின், நிகோடினமைட் மற்றும் உயிர்ச்சத்து பி3 என்னும் பெயர்களில் இடைமாற்றமாக உபயோகப்படுத்தபடுகின்றது.

உணவுத்தேவைகள்[தொகு]

நியாசின் தினமும் தேவைபடுகின்ற அளவுகள் - குழந்தைகள்: 2–12 மிகி, பெண்கள்: 14 மிகி, ஆண்கள்: 16 மிகி, மற்றும் கருவுற்ற (அல்லது) பாலூட்டுகின்ற தாய்மார்கள்: 18 மிகி.[3]. முதிர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்குமான அதிகப்பட்ச தேவையளவு: 35 மிகி.

பொதுவாக, நியாசின் அளவுகள் சிறுநீரின் உயிரிக்குறியீடுகளைக் கொண்டு கண்டறியப்படுகிறது.[4] இவை, (இரத்த) ஊனீர் அளவுகளைக்காட்டிலும் சரியானதாக நம்பப்படுகிறது.[5]

உயிரித்தொகுப்பு மற்றும் வேதித்தொகுப்பு[தொகு]

உயிரித்தொகுப்பு

அத்தியாவசிய அமினோ அமிலமான டிரிப்டோபானிலிருந்து கல்லீரலால் நியாசினைத் தொகுக்க முடியும். ஒரு மில்லிகிராம் நியாசின் தயாரிக்க அறுபது மில்லிகிராம் டிரிப்டோபான் தேவைப்படுகிறது[3]. டிரிப்டோபானின் ஐந்துருப்பு நறுமண பல்லினவட்டம் பிளவுபடுத்தப்பட்டு, டிரிப்டோபானின் ஆல்ஃபா அமினோ அமிலத்துடன் இணைந்து நியாசினின் ஆறுருப்பு நறுமண பல்லினவட்டமாக மறுசீராக்கப்படுகிறது. டிரிப்டோபான், நிகோடினமைட் அடெனின் டைநியூகிளியோடைடாக மாற்றம்பெறும் சில வினைகளில் ரிபோஃபிளாவின், உயிர்ச்சத்து பி6 மற்றும் இரும்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3-மீத்தைல் பிரிடினிலிருந்து பல மில்லியன் கிலோகிராம் நியாசின் தயாரிக்கப்படுகிறது.

உணவு மூலங்கள்[தொகு]

பல்வேறு உணவுகளிலும் (கல்லீரல், கோழி, மாட்டிறைச்சி, மீன், தானியங்கள், வேர்க்கடலை (கச்சான்), பயறுவகைகள்) நியாசின் உள்ளது. மேலும், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் முட்டைகளிலுள்ள டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலத்திலிருந்தும் நியாசின் தொகுக்கப்படுகிறது.

விலங்கு பொருட்கள்:

பழங்கள் மற்றும் காய்கறிகள்:

விதைகள்:

பூஞ்சைகள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Niacin — PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  2. "Niacin — PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  3. 3.0 3.1 Jacobson, EL (2007). "Niacin". Linus Pauling Institute. பார்த்த நாள் 2011-08-08.
  4. Institute of Medicine (2006). Dietary Reference Intakes Research Synthesis: Workshop Summary. National Academies Press. p. 37. http://books.nap.edu/openbook.php?record_id=11767&page=37. 
  5. Jacob RA, Swendseid ME, McKee RW, Fu CS, Clemens RA (April 1989). "Biochemical markers for assessment of niacin status in young men: urinary and blood levels of niacin metabolites". J. Nutr. 119 (4): 591–8. பப்மெட் 2522982. http://jn.nutrition.org/cgi/pmidlookup?view=long&pmid=2522982. 


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)
"http://ta.wikipedia.org/w/index.php?title=நியாசின்&oldid=1367141" இருந்து மீள்விக்கப்பட்டது