சீனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனி (இந்திய வழக்கில் சர்க்கரை) சிறிய கட்டிகளால் ஆன திண்மப் பொருளாகும். சீனியானது கரும்பு மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இது இந்தியா, பாக்கிஸ்தான், சீனா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கரும்பில் இருந்தே பெறப்படுகின்றது. இலங்கையில் திருகோணமலை, கந்தளாய் பகுதியில் சீனித் தொழிற்சாலைகள் இருந்தன. பின்னர் மூடப்பட்டன. இது பொதுவாக சுக்குரோசு (Sucrose) எனப்படும் காபோவைதரேட்டு ஆகும்.