உருசியா
| Российская Федерация Rossiyskaya Federatsiya ரஷ்யக் கூட்டரசு |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் எதுவும் இல்லை |
||||||
| நாட்டுப்பண் ரஷ்யாவின் தேசிய கீதம் (Hymn of the Russian Federation) |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
மாஸ்கோ |
|||||
| ஆட்சி மொழி(கள்) | ரஷ்யன், மற்றும் பல | |||||
| அரசு | அரை ஜனாதிபதி முறை | |||||
| விடுதலை | ||||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,70,75,200 கிமீ² (1 ஆவது) 65,92,800 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.5 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2010 மதிப்பீடு | 141,927,297 (9 ஆவது) | ||||
| - | 2002 குடிமதிப்பு | 145,513,037 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $1.778 டிரில்லியன் (7-9 ஆவது) | ||||
| - | நபர்வரி | $12,254 (54 ஆவது) | ||||
| ம.வ.சு (?) | ? (மத்திம) (?) | |||||
| நாணயம் | ரூபிள் (RUB) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+2 - +12) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.+3 - +13) | ||||
| இணைய குறி | .ru, .su reserved | |||||
| தொலைபேசி | +7 | |||||
| மின்னழுத்தம் | 220 V | |||||
| அலையெண் | 50 Hz | |||||
உருசியா (Russia) அல்லது இரசியா என்பது உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடு. இந்நாட்டின் முழுப்பெயர் உருசியக் கூட்டமைப்பு என்பதாகும். தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ருஷ்யா என்றும் குறிக்கப்பட்டுள்ன. தங்கள் மொழியிலும் எழுத்திலும் அவர்கள் Росси́йская Федера́ция (Rossiyskaya Federatsiya அல்லது ரசீஸ்க்கய ஃபெதராத்சியா) அல்லது சுருக்கமாக உருசியா (உருசிய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: Rossiya அல்லது Rossija). ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பெருநிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாகும் இது. இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால், உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான கனடாவின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய வட ஆசியா முழுவதையும் மற்றும் 40% ஐரோப்பா பகுதிகளையும் உள்ளடக்கியது. 11 விதமான கால வேறுபாடுகளை (Time zone) யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. உலகிலேயே அதிகமான அளவு காடு வளத்தையும் 8,087,900 ச.கிமீ கள் கொண்டதும், இதுவரை பயன்பாட்டில் வராத ஏராளமான கனிம வளங்களையும் கொண்டது. உலகின் நான்கில் ஒரு பங்கு 1/4 உறையாத குடிக்க தகுந்த நன்னீரை கொண்ட நாடும் ஆகும். உருசியா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா, லத்வியா, லித்துவானியா, போலந்து, பெலாரஸ், உக்ரைன், ஜார்ஜியா, அசர்பைஜான், கசகஸ்தான், சீனா, மங்கோலியா மற்றும் வட கொரியா.
தொடக்க கால உருசியாவின் வரலாறு கி.பி 3ம் முதல் 8ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கிழக்கு சிலேவ் என்னும் பூர்வகுடிமக்கள் மூலம் அறியப்படுகிறது. அதன் பிறகு வைக்கிங் என்னும் போர் செய்யும் மக்க்ள் 9வது நூற்றாண்டில் கிழக்கும் சிலேவ் நாட்டை உருவாக்கி ஆண்டு வந்தனர்.
உருசியா கடந்த இரண்டு நூற்றண்டுக்ளில் உருசியப் பேரரசாகவும், சோவியத் ஒன்றியம் மூலமாகவும் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக வளர்ந்தது. 1917ல் உருசியா புரட்சி மூலம் உருவான 15 குடியரசுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனில் முதலானதாகவும் பெரிய குடியரசாகவும் இருந்தது. சோவியத் ஒன்றியம் உலகின் முதல் மற்றும் பெரிய ஜனநாயக சோசலிச நாடாகும். அப்போதைய இரண்டு வல்லரசுகளில் ஒன்றாகவும் இருந்தது. 1991ல் சோவியத் யூனியன் கலைக்க்ப்படடதால் பிறகு மீண்டு உருசியா குடியரசாக உருவானது.
பொருளடக்கம் |
[தொகு] மக்கள் பரம்பல்
உருசியாவின் மக்கள் தொகை 143 மில்லியன் ஆகும். பாரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால் மக்கள் அடர்த்தி 8.3/கிமீ2 ஆகும். பொதுவாக 78% மக்கள் ஆங்காங்கே இருக்கும் பெரிய நகரங்களிலேயே செறிவாக வாழ்கின்றார்கள். உருசியாவின் 80% மக்கள் உருசிய இன மக்கள் ஆவார்கள். இவர்களை தவிர பல சிறுபான்மை இன மக்கள் அவர்களுக்குரிய பாரம்பரிய நிலப்பகுதிகளில் வாழ்கின்றார்கள்.
[தொகு] உருசியாவின் ஆரம்ப கால வரலாறு
உருசிய நாடு முழுவதும் பனிசூழ் பெருநிலப்பகுதி. முதன் முதலாக அடிமைகள் இப்பெருநிலப்பகுதியில் குடியேறினர்கள். பின்னர் கீவ் நகரை தலைநகரக கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட நாடு உருவாக்கப்பட்டது. மங்கோலியர்கள் உருசிய நாட்டை அடிமைப்படுதினார்கள். சார் "பயங்கர இவான்" உருசிய நாட்டை மங்கொலியர்கள் பிடியிலிருந்து முழுவதுமாக விடுவித்தார்.சார் நிகோலசு உருசியாவின் கடைசி சார் மன்னராவார்.
[தொகு] ரஷ்யப் புரட்சி
19ம் நூற்றாண்டு வரை ரஷ்யாவில் மன்னராட்சியே நடைபெற்றுவந்தது. இக்காலத்தில் உலக நிலப்பரப்பில் சுமார் ஆறிலொரு பகுதியில் ரஷ்ய சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருந்தது. ஆட்சியாளர்களான சார் மன்னர்களின் எதேச்சதிகார செயற்பாடுகளின் விளைவாக 97 சதவீதமான வறியமக்கள் கடும் துன்பங்களை அனுபவித்தனர். அனைத்து உரிமைகளையும் இழந்திருந்த கூலி விவசாயிகள் பிரபுக்களின் தனிப்பட்ட உரிமைகளாக இருந்தனர். பிரபுக்களும் மதகுருமாரும் நாட்டின் வளங்களில் பெரும்பாலானவற்றைத் தம்வசம் வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் மொத்தக் குடித்தொகையில் 1%ராக மட்டுமே இருந்துவந்தனர். நாட்டின் மொத்த வருமானத்தில் மூன்றிலொரு பகுதி ரஷ்ய தேவாலயத்துக்கு உரியதாக இருந்தது.
இத்தகைய ஒரு பின்னணியில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யவின் கைத்தொழிற்துறையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இரும்பு, உருக்கு, புடவை, பிளாஸ்டிக், பலகை, இரசாயனப் பொருட்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் விரிவடைந்திருந்தன. மொஸ்கோ, பீட்டர்ஸ்பேர்க்,வொல்கா போன்ற பல நகரங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட வணிக நகரங்களாக உருவாயிருந்தன. 19ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் 3000 தொழிற்சாலைகள் இருந்ததுடன் அவற்றில் சுமார் 80000 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
ஆனால் இக்காலப்பிரிவில் தேசிய வருமானத்தில் 46% இராணுவத்துக்கும், 32% அரச குடும்பத்தின் செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டு வந்தன. ஏனைய நடவடிக்கைகளுக்கு ஒரு சிறு சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. முதலாம் அலெக்ஸாண்டர் மற்றும் இரண்டாம் அலெக்ஸாண்டர் ஆகிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் போது சிறுசிறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தபோதிலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருந்த அளவுக்கு ரஷ்யாவில் சமூகப் பொருளாதார மாற்றங்கல் ஏற்பட்டிருக்கவில்லை.
[தொகு] உருசியாவின் உள் ஆளுகைப்பிரிவுகள்
உலகின் அதிக பரப்பளவு கொண்ட உருசிய நாடு 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அவை
- 21 உட்குடியரசுகள்
- 47 ஓப்லாஸ்துகள்
- 8 பிரதேசங்கள்
- 6 தன்னாட்சி வட்டாரங்கள்
- 1 தன்னாட்சி ஓப்லஸ்துகள்
- 2 கூட்டமைப்பு நகரங்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Category:Russia |
|
|||||