திமித்ரி மெட்வெடெவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திமித்ரி அனத்தோலியெவிச் மெட்வெடெவ் Dmitry Anatolyevich Medvedev Дмитрий Анатольевич Медведев |
|
|
ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு மே 7 2008 |
|
| பிரதமர் | விளாடிமிர் பூட்டின் |
|---|---|
| முன்னவர் | விளாடிமிர் பூட்டின் |
|
உதவி பிரதமர்
|
|
| பதவியில் நவம்பர் 14 2005 – மே 7 2008 |
|
| பிரதமர் | மிக்கைல் பிராட்கொவ் விக்டர் சூப்கொவ் |
| முன்னவர் | பதவி உருவாக்கப்பட்டது |
| பின்வந்தவர் | TBD |
| அரசியல் கட்சி | தனிப்பட்ட அரசியல்வாதி (முன்னாள்)[1] Endorsements: ஐக்கிய ரஷ்யா Fair Russia Agrarian Party Civilian Power |
|
|
|
| பிறப்பு | 14 செப்டம்பர் 1965 லெனின்கிராட், சோவியத் ஒன்றியம் |
| தேசியம் | உருசியர் |
| வாழ்க்கைத் துணை |
ஸ்வெட்லானா மேட்வேடெவா |
| பிள்ளைகள் | ஈல்யா |
| பழைய மாணவர் | சென் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகம் |
| தொழில் | அரசியல்வாதி சட்டத்தரணி |
| சமயம் | ரஷ்ய பழமைவாத திருச்சபை[2] |
| இணையதளம் | அதிகாரபூர்வ இணையத்தளம் |
திமித்ரி அனத்தோலியெவிச் மெட்வெடெவ் (Dmitry Anatolyevich Medvedev, ரஷ்ய மொழி: Дми́трий Анато́льевич Медве́дев, பிறப்பு: செப்டம்பர் 14, 1965, லெனின்கிராட்) ரஷ்யாவின் மூன்றாவது அதிபராவார்[3]. மார்ச் 2, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். மே 7, 2008ல் பதவி ஏற்றார்.
இதற்கு முன்னர், நவம்பர் 14, 2005ல் ரஷ்யாவின் முதல் துணை பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். முன்னாள் அதிபர் விளாடிமிர் பூட்டினுடைய முக்கிய அலுவலராகவும், ரஷ்ய அரசின் எண்ணெய் நிறுவனமான காசபுரோமின் (Gazprom) இயக்குநர் அவைத் தலைவராகவும் (2000 லிருந்து) பணியாற்றியிருக்கிறார். விளாடிமிர் பூட்டினும் அவருக்கு ஆதரவான கட்சிகளும் இவருடைய போட்டியை ஆதரித்தனர். மெட்வெடவ் 2008ற்கு முன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதித்துவ பதவிகள் எதையும் வகித்ததில்லை[4].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ First Deputy Prime Minister Dmitry Medvedev Endorsed for the Next President’s Post, Voice of Russia, December 10, 2007.
- ↑ BBC NEWS | World | Europe | Profile: Dmitry Medvedev
- ↑ http://in.tamil.yahoo.com/News/International/0803/03/1080303022_1.htm ரஷ்ய அதிபர் தேர்தலில் திமித்ரி வெற்றி
- ↑ Putin sees Medvedev as successor BBC News