உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னாப்பிரிக்கா

ஆள்கூறுகள்: 30°S 25°E / 30°S 25°E / -30; 25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னாப்பிரிக்கக் குடியரசு
11 அதிகாரப்பூர்வ பெயர்கள்[1]
கொடி of தென்னாப்பிரிக்கா
கொடி
of தென்னாப்பிரிக்கா
சின்னம்
குறிக்கோள்: "ǃke e: ǀxarra ǁke" (ǀXam)
"வேற்றுமையில் ஒற்றுமை"
நாட்டுப்பண்: "தென்னாப்பிரிக்கா நாட்டுப்பண்"
தலைநகரம்
பெரிய நகர்ஜோகானஸ்பேர்க்[3]
ஆட்சி மொழி(கள்)11 மொழிகள்[1]
இனக் குழுகள்
(2019[5])
சமயம்
(2016)[6]
  • 10.9% சமயமின்மை
  • 4.4% பாரம்பரிய
    ஆப்பிரிக்க மதங்கள்
  • 1.6% இசுலாம்
  • 1.0% இந்து சமயம்
  • 2.7% மற்றவைகள்
  • 1.4% தீர்மானிக்கப்படவில்லை
மக்கள்தென்னாப்பிரிக்கர்
அரசாங்கம்ஒருமுக ஆதிக்கக்-கட்சி செயலாட்சியர் தலைவர் கொண்ட பாராளுமன்ற குடியரசு
சிறில் ரமபோசா
டேவிட் மபுசா
அமோஸ் மசோண்டோ
நோசிவிவே மாபிசா-நகாகுல
ரேமண்ட் சோண்டோ
சட்டமன்றம்நாடாளுமன்றம்
தேசிய சபை
தேசிய சட்டமன்றம்
விடுதலை 
31 மே 1910
11 திசம்பர் 1931
31 மே 1961
27 ஏப்பிரல் 1994
பரப்பு
• மொத்தம்
1,221,037 km2 (471,445 sq mi) (24வது)
• நீர் (%)
0.380
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
60 604 992 (2022 மதிப்பீடு)[7] (24வது)
• 2011 கணக்கெடுப்பு
51,770,560[8]:18
• அடர்த்தி
42.4/km2 (109.8/sq mi) (169வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
Increase $949 பில்லியன் [9] (33வது)
• தலைவிகிதம்
Increase $15,556[9] (96வது)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
Increase $411 பில்லியன்[9] (39வது)
• தலைவிகிதம்
Increase $6,739[9] (92வது)
ஜினி (2014)positive decrease 63.0[10]
அதியுயர்
மமேசு (2021)Increase 0.713[11]
உயர் · 109வது
நாணயம்தென்னாப்பிரிக்க இராண்ட் (ZAR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (SAST)
திகதி அமைப்புகுறுகிய வடிவங்கள்:
வாகனம் செலுத்தல்இடது புறம்
அழைப்புக்குறி+27
ஐ.எசு.ஓ 3166 குறியீடுZA
இணையக் குறி.za

தென்னாப்பிரிக்கா (South Africa) தென்னாப்பிரிக்கக் குடியரசு (RSA), என்பது ஆப்பிரிக்காவின் தென்முனையில் உள்ள நாடாகும். தெற்கே 2,798 கிலோமீட்டர்கள் (1,739 mi) ) வரையுள்ள இதன் வரம்புகள் அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வரை உள்ளது. [14] [15] [16] வடக்கே நமீபியா, போட்சுவானா, மற்றும் சிம்பாப்வே ஆகிய அண்டை நாடுகள் உள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கில் மொசாம்பிக் மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகள் உள்ளது. லெசோத்தோ நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது . [17] பழைய உலகின் பிரதான நிலப்பரப்பில் தெற்கே அமைந்துள்ளதும் மற்றும் தான்சானியாவுக்குப் பிறகு பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் உள்ளது . தென்னாப்பிரிக்கா ஒரு பல்லுயிர் மையமாக உள்ளது. இங்கு, தனித்துவமான பல்உயிர்த்தொகுதி, தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கே வசிக்கின்றனர். உலகின் 23-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும் மற்றும் 1,221,037 சதுர கிலோமீட்டர்கள் (471,445 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் பிரிட்டோரியா, ப்ளூம்பொன்டின் மற்றும் கேப் டவுன் ஆகிய மூன்று தலைநகரங்கள் உள்ளன, அவை முறையே நிர்வாக, நீதித்துறை மற்றும் சட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரம் ஜோகானஸ்பர்க் ஆகும்.

சொற்பிறப்பியல்

[தொகு]

"தென்னாப்பிரிக்கா" என்ற பெயர் ஆப்பிரிக்காவின் தென்முனையில் உள்ள நாட்டின் புவியியல் இருப்பிடத்திலிருந்து பெறப்பட்டது. நாடாக உருவானவுடன் ஆங்கிலத்தில் தென்னாப்பிரிக்கா என்றும் இடச்சு மொழியில், Unie van Zuid-Afrika என்றும் பெயரிடப்பட்டது. இது நாடாக உருவாவதற்கு முன்னர் தனியாக இருந்த நான்கு பிரித்தானியக் காலனியைக் குறிக்கிறது. 1961 முதல், ஆங்கிலத்தில் "தென்னாப்பிரிக்கா குடியரசு" என்றும் ஆபிரிக்கான மொழியில் Republiek van Suid-Afrika என்றும் அழைக்கப்படுகிறது . 1994 முதல், தென்னாப்பிரிக்காவின் 11 அதிகாரப்பூர்வ மொழிகள் ஒவ்வொன்றிலும் அதிகாரப்பூர்வ பெயரைக் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல்

[தொகு]
நவீன வானவில் தேசத்தை உருவாக்கிய இடம்பெயர்வுகள்

தென்னாப்பிரிக்கா உலகின் பழமையான தொல்பொருள் மற்றும் மனிதப் புதைபடிவ தளங்களைக் கொண்டுள்ளது. [18] [19] [20] கடெங் மாகாணத்தில் உள்ள குகைகளில் இருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பரந்த புதைபடிவ எச்சங்களை மீட்டுள்ளனர். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் இப்பகுதியினை, " மனிதகுலத்தின் தொட்டில் " என்றுகூறியது. ரேமாண்ட் டார்ட் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மனிதன் போன்ற புதைபடிவமான டாங் சைல்டை (டாங் அருகே காணப்படுகிறது) 1924 இல் அடையாளம் கண்டார்,


வெளிநாட்டு உறவுகள்

[தொகு]

தென்னாப்பிரிக்கா ஐக்கிய நாடுகள் அவையின் (UN) நிறுவன உறுப்பினராக இருந்தது, பிரதமர் ஜான் இசுமட்சு ஐ.நா சாசனத்தின் முன்னுரையை எழுதினார். [21] தென்னாப்பிரிக்கா ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாகும், மேலும் அவையின்அனைத்து உறுப்பினர்களின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது .நிறவெறி முடிவுக்கு வந்த பிறகு, தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகளில் மீண்டும் சேர்க்கப்பட்டது.

புருண்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கொமோரோஸ் மற்றும் ஜிம்பாப்வே போன்ற ஆப்பிரிக்க மோதல்களில் தென்னாப்பிரிக்கா ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

நிர்வாக பிரிவுகள்

[தொகு]
தென்னாப்பிரிக்காவின் மாகாணங்கள்

இங்கு ஒன்பது மாகாணங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒரு ஓரவை முறைமை கொண்ட சட்டமன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் கட்சி-பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. சட்டமன்றம் ஒரு பிரதமரை அரசாங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறது. மாகாண அரசாங்கங்களின் அதிகாரங்கள் அரசியலமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன; இதில் சுகாதாரம், கல்வி, பொது வீடுகள் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் அடங்கும்.

மாகாணங்கள் 52 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன: 8 பெருநகரங்கள் மற்றும் 44 மாவட்ட நகராட்சிகள் உள்ளன . மாவட்ட நகராட்சிகள் 205 உள்ளூர் நகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மாகாணம் மாகாண தலைநகரம் மிகப்பெரிய நகரம் பகுதி (கிமீ 2 ) [22] மக்கள் தொகை (2016) [23] மக்கள் தொகை (2020) [24]
கிழக்கு கேப் பிஷோ போர்ட் எலிசபெத் 168,966 6,996,976 6,734,000
சுதந்திர அரசு புளூம்பொன்டின் ப்ளூம்ஃபோன்டைன் 129,825 2,834,714 2,929,000
கௌதெங் ஜோகானஸ்பேர்க் ஜோகன்னஸ்பர்க் 18,178 13,399,724 15,488,000
குவாசுலு-நடால் பீட்டர்மரிட்ஸ்பர்க் டர்பன் 94,361 11,065,240 11,532,000
லிம்போபோ போலோக்வானே போலோக்வானே 125,754 5,799,090 5,853,000
இம்புமலாங்கா இம்போம்பேலா ம்போம்பேலா 76,495 4,335,964 4,680,000
வடமேற்கு மஹிகெங் கிளர்க்ஸ்டோர்ப் 104,882 3,748,435 4,109,000
வடக்கு கேப் கிம்பர்லி கிம்பர்லி 372,889 1,193,780 1,293,000
மேற்கு கேப் நகர முனை நகர முனை 129,462 6,279,730 7,006,000

பல்லுயிர்

[தொகு]

தென்னாப்பிரிக்கா 4 ஜூன் 1994 இல் உயிரியல் பன்முகத்தன்மை குறித்த ரியோ மாநாட்டில் கையெழுத்திட்டது மற்றும் [25] நவம்பர் 1995இல் நடைபெற்ற மாநாட்டில் உறுப்பினரானது. அதன் பின்னர் தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தைத் தயாரித்தது, இது ஜூன் [26], 2006 அன்று மாநாட்டில் பெறப்பட்டது. உலகின் பதினேழு பெரும்பல்வகைமை நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. [27]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 The Constitution of the Republic of South Africa (PDF) (2013 English version ed.). Constitutional Court of South Africa. 2013. Archived (PDF) from the original on 23 August 2018. பார்க்கப்பட்ட நாள் 17 April 2020.
  2. 2.0 2.1 2.2 "South Africa at a glance | South African Government". www.gov.za. Archived from the original on 26 May 2020. பார்க்கப்பட்ட நாள் 18 June 2020.
  3. "Principal Agglomerations of the World". Citypopulation.de. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 30 October 2011.
  4. The Constitution of the Republic of South Africa (PDF) (2013 English version ed.). Constitutional Court of South Africa. 2013. ch. 1, s. 6. Archived (PDF) from the original on 23 August 2018. பார்க்கப்பட்ட நாள் 17 April 2020.
  5. "Mid-year population estimates" (PDF). Statistics South Africa. 29 July 2019. Archived (PDF) from the original on 29 July 2019. பார்க்கப்பட்ட நாள் 29 July 2019.
  6. "South Africa – Community Survey 2016". www.datafirst.uct.ac.za. Archived from the original on 25 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
  7. "Mid-year population estimates 2022" (PDF). stats sa. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  8. Census 2011: Census in brief (PDF). Pretoria: Statistics South Africa. 2012. pp. 23–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0621413885. Archived (PDF) from the original on 13 May 2015.
  9. 9.0 9.1 9.2 9.3 "World Economic Outlook Database, October 2022". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். October 2022. பார்க்கப்பட்ட நாள் December 23, 2022.
  10. "Gini Index". World Bank. Archived from the original on 29 May 2020. பார்க்கப்பட்ட நாள் 25 September 2018.
  11. "Human Development Report 2021/2022" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  12. "Data Source Comparison for en-ZA". www.localeplanet.com. Archived from the original on 16 August 2021. பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
  13. "Data Source Comparison for af-ZA". www.localeplanet.com. Archived from the original on 5 May 2021. பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
  14. "South African Maritime Safety Authority". South African Maritime Safety Authority. Archived from the original on 29 December 2008. பார்க்கப்பட்ட நாள் 16 June 2008.
  15. "Coastline". The World Factbook. CIA. Archived from the original on 16 July 2017. பார்க்கப்பட்ட நாள் 16 June 2008.
  16. "South Africa Fast Facts". SouthAfrica.info. April 2007. Archived from the original on 19 July 2008. பார்க்கப்பட்ட நாள் 14 June 2008.
  17. Guy Arnold. "Lesotho: Year In Review 1996 – Britannica Online Encyclopedia". Encyclopædia Britannica. Archived from the original on 15 June 2013. பார்க்கப்பட்ட நாள் 30 October 2011.
  18. {{cite book}}: Empty citation (help)
  19. Deacon, HJ (2001). "Guide to Klasies River" (PDF). Stellenbosch University. p. 11. Archived from the original (PDF) on 21 February 2011. பார்க்கப்பட்ட நாள் 5 September 2009.
  20. Centre, UNESCO World Heritage. "Fossil Hominid Sites of South Africa". UNESCO World Heritage Centre. Archived from the original on 4 December 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  21. Schlesinger, Stephen E. (2004). Act of Creation: The Founding of the United Nations: A Story of Superpowers, Secret Agents, Wartime Allies and Enemies, and Their Quest for a Peaceful World. Cambridge, Massachusetts: Westview, Perseus Books Group. pp. 236–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8133-3275-8.
  22. Stats in Brief, 2010 (PDF). Pretoria: Statistics South Africa. 2010. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-621-39563-1. பார்க்கப்பட்ட நாள் 14 January 2011.
  23. "Community Survey 2016 In Brief" (PDF). Statistics South Africa. Archived from the original (PDF) on 16 May 2018. பார்க்கப்பட்ட நாள் 28 April 2018.
  24. Stats in Brief, 2020: Mid 2020 official estimates from Statistics South Africa, Pretoria.
  25. "List of Parties". Archived from the original on 24 January 2011. பார்க்கப்பட்ட நாள் 8 December 2012.
  26. "South Africa's National Biodiversity Strategy and Action Plan" (PDF). Archived from the original (PDF) on 2 May 2013. பார்க்கப்பட்ட நாள் 10 December 2012.
  27. "Biodiversity of the world by countries". Institutoaqualung.com.br. Archived from the original on 1 November 2010. பார்க்கப்பட்ட நாள் 30 May 2010.

மேலும் படிக்க

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னாப்பிரிக்கா&oldid=3634084" இலிருந்து மீள்விக்கப்பட்டது