ஜோகானஸ்பேர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஜோகார்னஸ்பேக் | |
| Johannesburg skyline from Gold Reef City | |
| குறிக்கோளுரை: Unity in Development | |
| அமைவு: | |
|---|---|
| நாடு | தென்னாபிரிக்கா |
| மாகாணம் | கௌடெங் |
| தொடக்கம் | 1886 |
| அரசு | |
| - நகரத் தந்தை | ஆமோஸ் மசொன்டோ |
| பரப்பளவு | |
| - நகரம் | 1,644 கிமீ² (634.8 சதுர மைல்) |
| ஏற்றம் | 1,753 மீ (5,751 அடி) |
| மக்கள் தொகை (2001) | |
| - நகரம் | 3,225,812 |
| - அடர்த்தி | 1,962/கிமீ² (5,081.6/சதுர மைல்) |
| நேர வலயம் | SAST (ஒ.ச.நே.+2) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 011 |
| இணையத்தளம்: www.joburg.org.za | |
ஜோகார்னஸ்பேக் தென்னாபிரிக்காவின் மிகப்பெரியதும் மக்கள்தொகை கூடந்துமான நகரமாகும். இது கௌடெங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.ஜோகானர்னஸ்பேக் உலகில் 40வது பெரிய கூட்டுநகரமாகும். இது பிழையாக தென்னாபிரிக்காவின் தலை நகரமாக கருதப்படுவதுண்டு. தென்னாபிரிக்காவின் உச்சநிலை நீதிமன்றமான யாப்பு நீதிமன்றம் இங்கு அமைந்துள்ளது.
கனியவளங்கள் நிறைந்தப் பகுதியில் அமைந்துள்ளமையால் ஜோகார்னஸ்பேக் பாரிய தங்க, வைர வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு தெற்கு ஆபிரிகாவின் பெரியதும் வேலைப்பழு கூடியதுமான ஓ. ஆர். தம்போ பன்னாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது.
தென்னாபிரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இங்கு 3 மில்லியனுக்கதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஏனைய நகரங்களைவிட ஜோகார்னஸ்பேக் பரப்பளவில் கூடியதாகும். இது 1,644 ச.கி.மீ (635 ச.மை) பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை அடர்த்தி 1,962 inhabitants per ச.கி.மீ (5,082/ச.மீ) பாரிய ஜோகார்னஸ்பேக்கின் மக்கள்தொகை 8 மில்லியன் ஆகும்.