இங்கியோன்
| இங்கியோன் 인천 仁川 இங்கோன், இன் சுன் |
|
|---|---|
| Map of தென்கொரியா வின் வரைபடத்தில் இங்கியோன் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | தென்கொரியா |
| கொரிய மண்டலம் | சியோல் தேசிய தலைநகர்ப் பகுதி (சுடோக்வன்) |
| நிறுவப்பட்டது | 1883 - கெமுல்போ என்று |
| நிர்வாகப் பிரிவுகள் |
பட்டியல்
|
| அரசு | |
| - வகை | பெருநகரம் |
| - மேயர் | சாங் யங்-கில் |
| - அவைத் தலைவர் | கிம் கி-சின் |
| பரப்பளவு | |
| - பெருநகரப் பகுதி | 1,029.16 கிமீ² (397.4 ச. மைல்) |
| மக்கள் தொகை (2010)[1] | |
| - பெருநகரப் பகுதி | 27,75,645 |
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) |
| நேர வலயம் | கொரியா சீர்தர நேரம் (ஒ.ச.நே.+9) |
| கொரிய மொழி வகைகள் | சயோல் பாணி |
| மலர் | ரோஜா |
| மரம் | துலிப் மரம் |
| பறவை | நாரை |
| இணையத்தளம்: incheon.go.kr (ஆங்கிலம்) | |
இங்கியோன் பெருநகரம் (Incheon Metropolitan City) கொரியாவின் வடமேற்கில் அமைந்துள்ளது. 1883ஆம் ஆண்டு கெமுல்போ துறைமுகம் கட்டப்பட்டபோது நகரில் 4700 நபர்களே இருந்தனர். இன்று அதுவே 2.76 மில்லியன் மக்கள்தொகை உள்ள பெருநகரமாக வளர்ந்து கொரியாவின் சியோல் மற்றும் பூசனை அடுத்து மூன்றாவது பெருநகரமாக விளங்குகிறது. துறைமுக நகராக இருக்கும் வசதியால் கொரியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் இந்த நகரமும் அண்மைக்காலங்களில் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இங்கியோன் துறைமுகம் 2003ஆம் ஆண்டில் கொரியாவின் முதல் திறந்த பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அது முதல் பல உள்நாட்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தப் பொருளாதார மண்டலத்தில் முதலீடு செய்துள்ளன. சாம்சங் நிறுவனம் தனது உயிரியல் தொழில் முனைவிற்கு சாங்டோ பன்னாட்டு நகரை மையமாகக் கொண்டுள்ளது.
ஓர் பன்னாட்டு நகரமாக இங்கு 2009 இங்கியோன் உலக சந்தை மற்றும் விழா போன்ற பல பெரும் பன்னாட்டு மாநாடுகளும் கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன. பதினேழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இங்கு செப்டம்பர் 19, 2014 முதல் நடைபெற உள்ளன. உலகின் பல பகுதிகளையும் வடகிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் மையமாக இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் இங்கியோன் துறைமுகம் விளங்குகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- அரசு இணையத்தளம் இங்கியோன் பெருநகரம்
- கெமுல்போ முதல் சாங்டோ (கொரியாவின் பன்னாட்டு வாயில்) வரை- படக்காட்சியில் வரலாறு
|
||||||||||