தங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
79 பிளாட்டினம்தங்கம்பாதரசம்
Ag

Au

Rg
Au-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
பொன், Au, 79
வேதிப்பொருள் வரிசை transition metal
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
116, d
தோற்றம் உலோக மஞ்சள்
அணு எடை 196.966569(4) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Xe] 4f14 5d10 6s1
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2, 8, 18, 32, 18, 1
இயற்பியல் பண்புகள்
நிலைமை திண்மம்
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
19.30 g·cm−3
உருகுநிலையில்
நீர்ம அடர்த்தி
17.31 g·cm−3
கொதி நிலை 1337.33 கெ, K
(1064.18 °C, 1947.52 °F)
உருகு
வெப்பநிலை
3129 K
(2856 °C, 5173 °F)
உருகுநிலை வெப்பம் 12.55 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
324 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 25.418 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K 1646 1814 2021 2281 2620 3078
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு Lattice face centered cubic
ஆக்சைடு நிலைகள் -1, 1, 2, 3, 4, 5
(அம்போடெரிக் ஒக்சைட்)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 2.54 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள் 1st: 890.1 கிஜூ/மோல்
2nd: 1980 kJ/mol
அணு ஆரம் 144 pm பிமீ
கூட்டுப்பிணைப்பு ஆரம் 136±6 pm
வான் டெர் வால் ஆரம் 166 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு diamagnetic
மின் தடைமை (20 °C) 22.14 nΩ·m
வெப்பக் கடத்துமை (300 K) 318 W·m−1·K−1
வெப்ப நீட்சி (25 °C) 14.2 µm·m−1·K−1
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி)
(r.t.) 2030 மீ.நொ−1
(m·s−1)
நழுவு தகைமை
(Shear modulus)
27 GPa
பரும தகைமை(Bulk modulus) 180 GPa
பாய்சான் விகிதம்
(Poisson ratio)
0.44
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
2.5
விக்கெர் கெட்டிமை 216 MPa
`பிரிநெல் கெட்டிமை 25 HB MPa
CAS எண் 7440-57-5
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
பொன் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
195Au syn 186.10 d ε 0.227 195Pt
196Au syn 6.183 d ε 1.506 196Pt
β 0.686 196Hg
197Au 100% Au ஆனது 118 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
198Au syn 2.69517 d β 1.372 198Hg
199Au syn 3.169 d β 0.453 199Hg
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு
தங்கம்

தங்கம் அல்லது பொன் (Gold) என்பது இது மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஒரு உலோகமாகும். தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 79. இதன் அடர்த்தி 19.3 அதாவது நீரைப்போல் சுமார் 19 மடங்கு எடையுள்ளது . இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.

பொருளடக்கம்

[தொகு] தங்கத்தின் தன்மை.

தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பள பளப்பாகவே இருக்கும். ஒருபங்கு நைட்ரிக் அமிலமும் மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.

[தொகு] தங்கச் சுரங்கம்

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை ரசாயன முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கானடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் '''கோலார்''' என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது.

[தொகு] தங்கத்தின் மதிப்பு

தங்கத்தின் '''காரட்''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

[தொகு] நாணயச் செலாவணி

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.

[தொகு] தங்கத்தின் பயன்பாடு

தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், நகைகள் போன்றவற்றைச் செய்வர். தங்கம் மென்மையான உலோகம் ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி யைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமேன்பதர்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்கிறார்கள் .வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா.

[தொகு] பண்பாட்டு முக்கியத்துவம்

தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அணுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவது வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர் கஜனி முகம்மது என்ற முகலாய மன்னன் இந்தியாவிற்கு 17 முறை படையெடுத்து வந்து இங்குள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றான் என வரலாறு கூறுகிறது.

[தொகு] உசாத்துணை

  1. குழந்தைகள் கலைக் களஞ்சியம்- தொகுதி ஐந்து. - தமிழ் வளர்ச்சிக் கழகம் - 1986
  2. இளையர் அறிவியல் களஞ்சியம் -.மணவை பப்ளிகேஷன் வெளியீடு -1995
"http://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்&oldid=1073760" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்