சாவோ பாவுலோ
| சாவோ பாவுலோ | |||
|---|---|---|---|
| பின்ஹெய்ரோஸ் ஆற்றுக்கு மேல் கட்டப்பட்டுள்ள ஒக்டாவியோ ஃபிரயாஸ் டி ஒலிவேரா பாலம் | |||
|
|||
| சிறப்புப்பெயர்: டெரா டா கரோவா (Land of Drizzle), சம்ப்பா | |||
| குறிக்கோளுரை: "நன் டுக்கோர், டூக்கோ" (இலத்தீன்) "நான் வழிநடத்தப்படுவதில்லை வழிநடத்துகிறேன்" |
|||
| சாவோ போலோ மாநிலத்தின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பகுதி | தென்கிழக்கு | ||
| மாநிலம் | |||
| நிறுவப்பட்டது | ஜனவரி 25, 1554 | ||
| அரசு | |||
| - மேயர் | கில்பர்ட்டோ கசாப் (சனநாயகக் கட்சி) | ||
| பரப்பளவு | |||
| - மாநகரசபை | 1,522.989 கிமீ² (588 ச. மைல்) | ||
| - மாநகரம் | 8,051 கிமீ² (3,108.5 sq mi) | ||
| ஏற்றம் | 760 மீ (2,493.4 அடி) | ||
| மக்கள் தொகை (2008) | |||
| - மாநகரசபை | 10 | ||
| - அடர்த்தி | 7,233/கிமீ² (18,733.4/ச. மைல்) | ||
| - மாநகரம் | 22 | ||
| - மாநகர அடர்த்தி | 2,277/கிமீ² (5,897.4/ச. மைல்) | ||
| நேர வலயம் | UTC-3 (ஒ.ச.நே.-3) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
UTC-2 (ஒ.ச.நே.-2) | ||
| HDI (2000) | 0.841 – high | ||
| இணையத்தளம்: City of São Paulo | |||
சாவோ பாவுலோ (São Paulo) பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரம். இதன் பெருநகரப் பகுதியுடன் சேர்த்து இது உலகின் மிகப் பெரிய நகரப் பகுதிகளுள் ஒன்றாக விளங்குகிறது. இந் நகரம் பிரேசிலின் மிகக் கூடிய மக்கள்தொகை கொண்ட சாவோ போலோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். நாட்டின் செல்வம் மிகுந்த நகரமும் இதுவே. இதன் பெயர் போர்த்துக்கேய மொழியில் புனிதர் பால் (Saint Paul) என்பதைக் குறிக்கிறது. சாவோ போலோ, வணிகம், நிதி ஆகிய துறைகளிலும், கலை, பொழுதுபோக்கு என்பவற்றிலும் உலக அளவில் தாக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த நகரம் பல்வேறு அடையாளச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்குள்ள குடிவருவோர் விடுதி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல இலட்சக் கணக்கான குடிவருவோரை வரவேற்றது. நகரின் வணிகப் பகுதியில் அமைந்துள்ள பாலிஸ்ட்டா அவெனியூ நாட்டினதும், லத்தீன் அமெரிக்காவினதும் மிக முக்கியமான நிதித்துறை மையம் ஆகும். சாவோ போலோ பங்குச் சந்தையும் இங்குள்ள முக்கியமான ஒன்றாகும். மிராந்தே டோ வாலே கட்டிடம் உட்பட, பிரேசிலின் மிக உயர்ந்த கட்டிடங்கள் பல சாவோ போலோவில் உள்ளன.
|
||||||||||