சாவோ பாவுலோ (மாநிலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாவோ பாவுலோ
Estado de São Paulo
மாநிலம்
சாவோ பாவுலோ மாநிலம்
Flag of சாவோ பாவுலோ
Flag
Coat of arms of சாவோ பாவுலோ
Coat of arms
Motto: Pro Brasilia Fiant Eximia (இலத்தீன்)
"பிரேசிலுக்கு மாபெரும் சாதனைகள் சாதிக்கப்படட்டும்"
Anthem: பந்தெயிரான்டசு நாட்டுப்பண்
பிரேசிலில் சாவோ பாவுலோ மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் சாவோ பாவுலோ மாநிலத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°32′S 46°38′W / 23.533°S 46.633°W / -23.533; -46.633ஆள்கூறுகள்: 23°32′S 46°38′W / 23.533°S 46.633°W / -23.533; -46.633
Country  Brazil
(அரசியல்) மிகப்பெரும் நகரம் சாவோ பாவுலோ
அரசாங்க
 • ஆளுநர் கெரால்டோ அல்க்மின் (PSDB)
 • துணை ஆளுநர் குயிகெர்மெ அஃபிஃப் டொமிங்கோசு
 • சட்டமன்றம் சாவோ பாவுலோ சட்டமன்றம்
பரப்பு
 • Total வார்ப்புரு:Infobox settlement/metric/mag
Area rank 12வது
மக்கள் (2012)[1]
 • மொத்தம் 41
 • தரம் முதலாவது
 • அடர்த்தி 170
 • அரர்த்திy தரம் மூன்றாவது
சுருக்கம் Paulista
மொத்த உள்நாட்டு உற்பத்தி
 • Year 2010 (IBGE)
 • Total US$614,579,311 (1st)[2]
 • Per capita US$15,322 (2nd)
HDI
 • Year 2005
 • பகுப்பு 0.851 – high (3rd)
நேர வலயம் BRT (UTC-3)
 • Summer (DST) BRST (UTC-2)
அஞ்சல் குறியீடு 01000-000 to 19990-000
ISO 3166 code BR-SP
Website http://www.saopaulo.sp.gov.br/

சாவோ பாவுலோ (São Paulo, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [sɐ̃w ˈpawlu]  ( listen)) பிரேசிலின் மாநிலங்களில் ஒன்றாகும்.பிரேசிலிய பொருளியலில் முதன்மையானதொரு தொழில் மற்றும் வணிக மையமாக விளங்குகிறது. திருத்தூதர் பவுலின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த மாநிலம் நாட்டின் மிகக்கூடிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. பிரேசிலின் மிகவும் செல்வமிக்க மாநிலமாகவும் உள்ளது. மாநிலத்தின் பெயரிலேயே அமைந்துள்ள இதன் தலைநகரமான சாவோ பாவுலோ தென் அமெரிக்காவிலேயே (தென் கோளத்திலேயே கூட) மிகப் பெரும் நகரமாக விளங்குகிறது.

பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.9% இந்த மாநிலத்தின் பங்களிப்பு உள்ளது. மேலும் பிரேசிலின் மாநிலங்களிடையே மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் மூன்றாமிடத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாமிடத்திலும் குழந்தை இறப்பு வீதத்தில் இரண்டாமிடத்திலும் எழுத்தறிவில் நான்காமிடத்திலும் உள்ளது.

40 மில்லியன் மக்கள்தொகையுடைய இந்த மாநிலம் பிரேசிலின் மிகுந்த மக்கள்தொகையுடைய மாநிலமாகவும் தென் அமெரிக்காவிலேயே மூன்றாவது மிகுந்த மக்கள்தொகையுடைய அரசியல் நிலப்பிரிவாகவும் உள்ளது. மாநிலத் தலைநகரம் சாவோ பாவுலோ உலகின் மிகப் பெரும் நகராட்சிகளில் ஏழாமிடத்தில் உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. [1]
  2. IBGE. Contas Regionais do Brasil - 2010: Tabela 1 - Produto Interno Bruto - PIB e participação das Grandes Regiões e Unidades da Federação - 2010. 2013-01-11
"http://ta.wikipedia.org/w/index.php?title=சாவோ_பாவுலோ_(மாநிலம்)&oldid=1613040" இருந்து மீள்விக்கப்பட்டது