எகிப்து
| جمهورية مصر العربية Gumhūriyyat Miṣr al-ʿArabiyyah எகிப்து அரபுக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Bilady, Bilady, Bilady |
||||||
| தலைநகரம் | கைரோ |
|||||
| பெரிய நகரம் | capital | |||||
| ஆட்சி மொழி(கள்) | அரபு1 | |||||
| மக்கள் | Egyptian | |||||
| அரசு | இராணுவ ஆட்சி | |||||
| - | பிரதமர் | அகமது சபீக் | ||||
| அமைப்பு | ||||||
| - | முதல் அரச வம்சம் | கி.மு. 3150 | ||||
| - | ஐ.இ. இடமிருந்து விடுதலை | பெப்ரவரி 28 1922 | ||||
| - | குடியரசு பிரகடனம் | ஜூன் 18 1953 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 9,80,869 கிமீ² (30வது) 3,78,715 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.632 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 80,335,036 (est.)[1] | ||||
| - | 1996 குடிமதிப்பு | 59,312,914 | ||||
| - | அடர்த்தி | 74/கிமீ² (120வது) 192/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $329.791 பில்லியன் (29th) | ||||
| - | நபர்வரி | $4,836 (110வது) | ||||
| ஜினி சுட்டெண்? (1999–00) | 34.5 (மத்திமம்) | |||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | Egyptian pound (EGP) |
|||||
| நேர வலயம் | EET (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | EEST (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .eg | |||||
| தொலைபேசி | +20 | |||||
| 1 | பேச்சு மொழி எகிப்திய அரபு. | |||||
எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். மேற்க்கே லிபியாவையும், தெற்க்கே சூடானையும், கிழக்கே காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாக கொண்ட எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர கி.மீ. மத்தியதரைக் கடலை வடக்குக் கரையிலும், செங்கடலை கிழக்குக் கரையிலும் கொண்டிருந்தாலும் சினாய் தீபகற்பத்தின் முலம் ஆசியாவுடனும் (இஸ்ரேல்) எல்லை கொண்டிருக்கிறது. எகிப்தின் ஜீவ நதியாக நைல் நதி பாய்கிறது. நைல் நதிக்கரையிலிருக்கும் விவசாய நிலங்களை தவிர பெரும்பாலான நிலங்கள் சகாரா பாலைவனமாகவே திகழ்கிறது. நாட்டின் பெரும்பாலான மக்கள் நைல் நதிக்கரையில் இருக்கும் கைரோ , அலெக்ஸாந்திரியா மற்றும் லுக்ஸர் போன்ற பெரிய நகரங்களிலேயே வசிக்கின்றனர். இந்நாட்டுக்கு சுதந்திரம் 1922-ல் வழங்கப்பட்டு 1953-ல் அறிவிக்கப்பட்டது. எகிப்து பண்டைக்காலத்தில் சிறப்புற்று விளங்கியது. எகிப்தின் பிரமிடுகள் உலகப்புகழ் பெற்றவை.
பொருளடக்கம் |
[தொகு] அரசியல்
[தொகு] 2011 எகிப்திய மக்கள் புரட்சி
முதன்மைக் கட்டுரை: 2011 எகிப்து புரட்சி
25 சனவரி 2011 அன்று அதிபர் ஓசுனி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து மிகப்பரவலாகக் கலகங்கள் தோன்றின. விரைவில் இது மாபெரும் குடியியல் எதிர்ப்புப் போராட்டமாக மாறி, பெருமளவில் மக்கள் பங்கேற்க ஆரம்பித்தனர். 29 சனவரி அன்று நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த முபாரக் அரசு, ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், மக்கள் இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடினர். 11 பெப்ருவரி 2011 அன்று கெய்ரோவை விட்டு வெளியேறிய முபாரக், தன் அதிபர் பதவியை விட்டுக் கொடுத்தார்.
01.02.2011 திகதி சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தலைநகர் கோய்ரோவிலும் இரண்டாவது தலைநகராக கருதப்படும் அலெக்சாந்திரா நகரிலும் ஓன்று கூடி முபாரக் மீதான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அத்துடன் இப்போரட்டக்காரர்களுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் பலவற்றிலும் மக்கள் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் எகிப்து மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று முன்தினம் தேசிய தொலைகாட்சியில் தோன்றி உரையாற்றிய முபாரக் பதவி விலகவோ நாட்டை விட்டு வெளியேறப் போவதோ இல்லை எனவும் ஆனால் அரசியல் மறுசீரமைப்புக்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் முபாரக்கின் இந்த மறு மொழிக்கு இணங்க மறுத்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து தம் போராட்டத்தை தொடர்ந்தனர். 01.02.2011 தொடர்ந்து ஓன்றுகூடிய அளவுக்கதிகமான போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் வன்முறையை பிரயோகிக்காது ஆதரவு வழங்கியதுடன் பாதுகாப்பையும் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் 02.02.2011 திகதி உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒன்றை விடுத்த எகிப்து இராணுவம் ஆர்பட்டக்காரர்களை வீடுகளுக்கு செல்லுமாறு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த ஒத்துழைப்பு நல்குமாறும் வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும் எதிர்கட்சியினர் இதற்கு இணங்க மறுத்ததுடன் முபாரக் பதவி விலகும் வரை தாம் வீட்டுக்கு செல்ல போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
இருப்பினும் எகிப்து ஜனாதிபதி ஒசுனி முபாரகிற்கு ஆதரமானோரும் கொய்ரோவில் ஓன்று கூடியதை அடுத்து இரு தரப்பினருக்கிடையில் மோதல் வெடித்தது. இதில் பலர் மரணமடைந்தும் காயப்பட்டும் இருந்தனர். இதேவேளை எகிப்தில் தற்போது அமுலிலிருக்கும் பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் இறுதியாக நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை மீல்பரிசீலனைக்குட்படுத்தவும் எகிப்திய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.
இதற்கிடையில் போராட்டம் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எகிப்தின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டமும் அமுல்படித்தப்பட்டது. இருப்பினும் அதனையும் மீறி மக்கள் வீதியில் கூட்டம் கூட்டமாக குழுமி நிற்பதும் ஐவேளை தொழுகைகளையும் வீதிகளிலேயே நிறைவேற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
எகிப்தியத் துணைத்தலைவர் ஒமார் சுலைமான் 11 பெப்ரவரி அன்று முபாரக் பதவி இறங்கியதையும் படைத்துறை உயர்மட்டக்குழுவிடம் ஆட்சியை ஒப்படைத்ததையும் அறிவித்தார்.
[தொகு] பிற நாடுகளின் கருத்துகள்
எகிப்து போராட்டங்களுக்கு பிற நாடுகளில் நல்ல ஆதரவும், மத்திய கிழக்காசியாவில் மக்களாட்சியற்ற நாடுகளில் ஆட்சியாளர்களின் கண்டனமும் கிடைத்தது. போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக உலகின் பல நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்திய துதுவராலயங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஜோர்தானின் இம்லாமிய எதிர்க்கட்சி இயக்கம், எகிப்து போன்ற போராட்டம் தமது நாட்டில் வரவேண்டும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ள போதிலும், தமது நாட்டிலும் அரசியல் மறுசீரமைப்பு தேவை என்று கோரியுள்ளது. எகிப்தில் நடக்கிற நிகழ்வுகள் “ஒரு தோற்று நோயைப் போன்றது” என்று கூறியுள்ள சிரியாவின் அதிபர் பஸர் அல் ஆசாத், அவற்றை தலைவர்கள் சரியாக கையாள வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Egypt" in the CIA World Factbook, 2007.
www.vidivelli.lk
[தொகு] மேலும் பார்க்க
|
|||||
sathees