துட்டன்காமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துட்டன்காமன்

.

துட்டன்காமன் அல்லது தூத்தன்கேமன் (Tutankhamun, கிமு 1341 – கிமு 1323) என்பவன் பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் ஆவான். இவன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை புதிய இராச்சியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயேபாரோ ஆனான். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் துட்டன்காட்டன் என்பதாகும். துட்டன்காமன் என்பதன் பொருள் ஆமனின் உயிருள்ள படிமம் என்பதாகும்[1] .

1922 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் துட்டன்காமனின் சமாதியைக் கண்டுபிடித்தமை உலகெங்கும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.

[தொகு] மரணத்தின் காரணம்

2005 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் துட்டன்காமனின் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அக்காயம் தேரோட்டம் அல்லது குதிரையோட்டம் போன்ற நிகழ்வுகளின் போது ஏற்பட்ட விபத்தாயிருக்கலாம் என்று கருதப்பட்டது. 2010 ஆண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் துட்டன்காமன் மரணமடையும் போது மிக ‌ஆபத்தான மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=துட்டன்காமன்&oldid=1113336" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்