கிலோகிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிலோ கிராம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இங்கே காட்டப்பட்டுள்ளது “அனைத்துலக முதலுருக் கிலோகிராம்” (International Prototype Kilogram (“IPK”)) எனப்படும் முதன்மையான ஒப்பீட்டு நிறையின் கணினி ஒளிப்ப்படம். இந்த முதன்மை கிலோகிராம் பிளாட்டினம்-இரிடியம் மாழைகளால் செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள செவ்ரே என்னும் இடத்தில் துல்லியமாக வெப்பநிலை, சூழ் அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்ட மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் BIPM (Bureau International des Poids et Mesures, புயுரோ இன் டர்னாசியொனால் டெ புவவ எ மெசூர்) என்னும் சீர் எடைகளுக்கும் அளவைகளுக்குமான அனைத்துலக அலுவலகம் ஆகும்.

கிலோகிராம் (குறுக்கம்: கிகி) என்பது சீர்தரம் செய்யப்பட்ட அனைத்துலக முறை அலகுகளில் உள்ள அடிப்படையான நிறை அலகு.

ஒரு கிலோகிராம் நிறை என்பது பிளாட்டினம்-இரிடியம் கலவையால் செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டில் செவ்ரே என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக சீரான வெப்ப அழுத்த நிலைகளில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் நிறை ஆகும். இப்பொருளை Le Grand K (லெ ‘கிரான்) என்று பிரெஞ்சு மொழியிலும், IPK அல்லது International Prototype Kilogram (அனைத்துலக முதலுருக் கிலோகிராம் என்று பொருள்படும் இன்ட்டர்நேசனல் புரோட்டோ டைப் கிலோகிராம்) என்று ஆங்கிலத்திலும் அழைக்கிறார்கள்.

ஒரு கிலோகிராம் என்பது சற்றேறக்குறைய ஒரு லிட்டர் நீரின் நிறையை ஒத்தது. உலகில் உள்ள நிறைகள் எல்லாமும் ஒப்பீடு செய்யும் முதன்மை சீர்தர அளவு இந்த கிலோகிராம் என்பது. அடிப்படையான அனைத்துலக முறை அலகுகளில் இது ஒன்றுதான் கிலோ போன்ற முன்னொட்டு கொண்ட அலகு. அதே போல இது ஓர் அலகு மட்டுமே இயற்கையான இயற்பியல் அடிப்படை நிகழ்வு அல்லாமல், ஒரு குறிப்பிட்ட புறப்பொருளின் அடிப்படையில் அமைந்த அலகு.

அன்றாட வாழ்வில் ஒரு கிலோகிராம் என்பது ஒரு நிறை என்றாலும், புவியின் ஈர்ப்பால் ஏற்படும் ஒருகிலோகிராம் எடையோடு நினைத்துப் புழங்குவது வழக்கம். ஆனால் நிறை (இலங்கையில் திணிவு) என்பது உண்மையில் எடை அல்ல. எடை என்பது ஒரு பொருளின் நிறை மீது செலுத்தும் புவி ஈர்ப்பு விசை ஆகும். இந்த விசையை நியூட்டன் என்னும் அலகால் அளப்பர். எனவே நிறை அல்லது திணிவு என்பது பொருளின் இயல் தன்மை, பொருண்மைத்தன்மை.

ஒரு பொருளின் நிறை என்பது அப்பொருள் மீது எந்த விசையைச் செலுத்தினாலும், அந்த விசையினால் அப்பொருள் கொள்ளும் முடுக்கத்தின் அளவை தீர்மானம் செய்யும் இயல்தன்மை எனலாம். ஒரு கிலோகிராம் நிறை மீது ஒரு நியூட்டன் விசையைச் செலுத்தினால், ஒரு மீ/நொ2 முடுக்கம் கொள்ளும்.

குறிப்புகள்[தொகு]

கிலோ ஆனது ஐக்கிய நாடுகள் பயன்படுத்தும் ஒலியியல் அகரத்தில் K ஐக் குறிப்பிடுகின்றது.

கிலோ அனைத்துலக முறையலகுகளில் முறையில் 103 அல்லது 1000 ஐக் குறிப்பிடுகின்றது. எடுத்துக் காட்டாக

  • 1000 கிராம் ஒரு கிலோகிராம்
  • 1000 மீட்டர் ஒரு கிலோமீட்டர்
  • 1000 வாட் ஒரு கிலோவாட்
  • 1000 ஜூல் ஒரு கிலோஜூல்

1795 இல் உத்தியோகபூர்வமாகப் பாவனைக்கு வந்தது (இதற்கு முன்னரும் பாவனையில் இருந்தது). இது கிரேக்க மொழியில் ஆயிரத்தைக் குறிக்கும் χίλιοι ("khilioi"), இருந்து வந்ததாகும்.

கணினியில் இதன் பயன்பாடு[தொகு]

கணினியில் கிலோபைட் ஆனது 210 அல்லது 1024 பைட்டைக் குறிக்கும். இதனால் 1000 இருந்து வேறுபடுத்த பலரும் சிறிய k இற்குப் பதிலாகக் K ஐப் பொதுவாகப் பாவிக்கின்ற போதிலும் எல்லாரும் இந்நடைமுறையைப் பின்பற்றுவதில்லை.

ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் 1000 பைட்களை ஒரு கிலோபைட் என்றே எடுத்துக் கொள்கின்றனr எனினும் விண்டோஸ் 1024 பைட்டையே 1 கிலோபைட்டை என எடுத்துக் கொள்வதால் ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்களின் கூறும் கொள்ளவானது பிழையாகக் கூடுதல் இட வசதியிருப்பதாகக் பிழையான விளக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் கிலோபைட்டை 1000 ஆகவோ அல்லது 1024 ஆகவோ கருதினால் வழுவீதம் 2.4% வீதமே இதுவே பின்னர் ரேராபைட்டாகும் போது 10% ஆகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிலோகிராம்&oldid=1369832" இருந்து மீள்விக்கப்பட்டது