கூபு கப்பல்

ஆள்கூறுகள்: 29°58′41″N 31°08′04″E / 29.97806°N 31.13444°E / 29.97806; 31.13444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னர் கூபுவின் தெப்பம்
மன்னர் கூபுவின் சூரியத் தெப்பம்
செய்பொருள்லெபனான் நாட்டு தேவதாரு மரம்
அகலம்5.9 மீட்டர்
உருவாக்கம்கிமு 2500 (4,500 ஆண்டுகளுக்கு முன்னர்)
தற்போதைய இடம்எகிப்தின் பெரும் அருங்காட்சியம்


கூபு கப்பல் (Khufu ship) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்ச மன்னர் கூபு என்பவர் கிமு 2500 ஆண்டில் இரா எனும் சூரியக் கடவுளுக்காக தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட பெரிய தெப்பம் ஆகும். இத்தெப்பம் கிசாவின் பெரிய பிரமிடு வளாகத்தை 1954-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்த போது கமால் எல்-மல்லாக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நீரில் செல்லக்கூடிய உலகின் இந்த முதல் படகு 4,500 ஆண்டுகள் பழைமையானது.[1] இப்படகு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட போது சிதைந்த நிலையில் இருந்தது. பின்னர் இதனை சீர் செய்து எகிப்தின் பெரும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பெரிய படகு போன்ற தெப்பத்தை இறந்த மன்னரின் மம்மியுடன் சேர்த்து பிரமிடு கல்லறையில் வைக்கப்படும். இது மன்னரின் மறு பிறவி வாழ்க்கையின் போது பயன்படும் என்பது பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கை ஆகும்.

தேவதாரு மரத்தால் செய்யபட்ட மன்னர் கூபுவின் கப்பல் 43.4 மீட்டர்கள் (142 அடி) நீளம் மற்றும் 5.9 மீட்டர்கள் (19 அடி) அகலம் கொண்டது. ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் செல்லக்கூடிய படகு போன்ற தொல்பொருட்களில் இதுவே உலகின் முதலாவதும் மற்றும் பழமையானதாகும். இது 4,500 ஆண்டுகள் பழமையானதாகும். எகிப்தின் பழமை வாய்ந்த பத்து தொல்பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.[2]

வரலாறு[தொகு]

இது சூரியக் கடவுளான இரா உடன் உயிர்த்தெழுந்த மன்னரை வானங்கள் முழுவதும் சுமந்து செல்வதற்காக பண்டைய எகிப்தியர்களால் நம்பப்பட்ட ஒரு சடங்குக் கப்பல். இருப்பினும், இது நீரில் பயன்படுத்தப்பட்டதற்கான சில அறிகுறிகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கப்பல் மன்னரின் பதப்படுத்தப்பட்ட மம்மி உடலை மெம்பிஸ் நகரத்திலிருந்து இருந்து கீசா நகரத்தின் கீசா பிரமிடு வளாகத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு இறுதிச் சடங்கு பொருளாக இருக்கலாம். அல்லது மன்னர் கூபுவே இதை புனித இடங்களுக்குச் செல்வதற்கு ஒரு "யாத்திரைக் கப்பலாக" பயன்படுத்தி இருக்கலாம். பின்னர் அது அவருக்குப் பிறகான வாழ்க்கையில் பயன்படுத்த கல்லறையில் புதைக்கப்ட்டு இருக்கலாம்.[3]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கூபு கப்பல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூபு_கப்பல்&oldid=3708826" இலிருந்து மீள்விக்கப்பட்டது