சிரியா
| الجمهورية العربية السورية Al-Ǧumhūriyyah al-ʿArabiyyah as-Sūriyyah சிரிய அரபுக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் கிடையாது |
||||||
| நாட்டுப்பண் Homat el Diyar "நாட்டின் காவலர்கள்" |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
தமஸ்கஸ் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | அரபு | |||||
| அரசு | அதிபர் முறை குடியரசு | |||||
| - | அதிபர் | பசார் அல்-அசாத் | ||||
| - | பிரதமர் | முகம்மது நஜி அல்-ஒடாரி | ||||
| விடுதலை | பிராண்சிடமிருந்து | |||||
| - | அறிவிப்பு (1) | செப்டம்பர் 19361 | ||||
| - | அறிவிப்பு (2) | ஜனவரி 1 1944 | ||||
| - | அங்கீகாரம் | ஏப்ரல் 17 1946 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,85,180 கிமீ² (88வது) 71,479 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.06 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | யூலை 2005 மதிப்பீடு | 19,043,000 (55வது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $71.74 பில்லியன் (65வது) | ||||
| - | நபர்வரி | $5,348 (101வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.721 (மத்திம) (106வது) | |||||
| நாணயம் | சிறிய பவுண் (SYP) |
|||||
| நேர வலயம் | கி.ஐ.நே. (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | கி,ஐ.கோ.நே. (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .sy | |||||
| தொலைபேசி | +963 | |||||
| 1சிரிய-பிராஸ் விடுதலை ஒப்பந்தம் பிரான்சால் அங்கீகரிக்கப்படவில்லை | ||||||
சிரியா (Syria) அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.
சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.
வரலாற்றில் சிறியா இன்றைய லெபனான், இசுரேல்,பாலஸ்தீனம் போன்றவற்றையும் யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் வடகிழக்கு மாநிலமான அல்-ஜசீரா பகுதியை நவீன சிரியாவின் ஏனைய பகுதிகளையும் கொண்டதாக கருத்தப்பட்டது. இதன்படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது. 1967 இல் இசுரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர் இசுரேல் சர்ச்சைக்குரிய கோகான் மேடுகளை கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் பின்னர் துருக்கியுடன் அடேய் மாநிலம் தொடர்பான சர்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது.