ஏப்ரல் 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIII | ||||||
ஏப்ரல் 17 கிரிகோரியன் ஆண்டின் 107ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 108ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 258 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 69 - பெட்ரியாக்கும் என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் பின்னர், விட்டேலியஸ் என்பவன் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
- 1492 - வாசனைப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பஸ் ஸ்பெயின் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
- 1524 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா கூட்டணியில் இருந்து விலகியது.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரோலினாவின் பிளைமவுத் நகரைத் தாக்கினர்.
- 1895 - சீன-ஜப்பான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியப் பேரரசு ஜெர்மனியிடம் சரணடைந்தது.
- 1961 - அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார்.
- 1969 - செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
- 1971 - முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1975 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நாம் பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது.
- 1986 - 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
- 2004 - இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
பிறப்புகள் [தொகு]
- 1756 -தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)
- 1894 - நிக்கிட்டா குருஷேவ், சோவியத் ஒன்றியத்தின் பிரதமர் (இ. 1971)
- 1916 - சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் பிரதம மந்திரி, உலகின் முதல் பெண் பிரதமர் (இ. 2000)
- 1946 - ஜோர்ஜெஸ் கோஹ்லெர், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)
- 1966 - விக்ரம், தமிழ் திரைப்பட நடிகர்
- 1972 - முத்தையா முரளிதரன், இலங்கைப் பந்தாளர்
- 1979 - சித்தார்த், பன்மொழி திரைப்பட நடிகர்
இறப்புகள் [தொகு]
- 1761 - தொமஸ் பேயிஸ், ஆங்கிலேயக் கணிதவியலாளர்
- 1790 - பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1706)
- 1942 - ஜீன் பெரின், நோபல் பரிசு] பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1870)
- 1975 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் (பி. 1888)
- 1976 - ஹென்ரிக் டாம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
- 1994 - ரொஜர் ஸ்பெரி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1913)
- 2004 - சௌந்தர்யா, இந்திய நடிகை (பி. 1971)
- 2013 - டி. கே. ராமமூர்த்தி, தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1922)