ஏப்ரல் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIII | ||||||
ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டின் 119ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 120ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 246 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1672 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான்.
- 1770 - ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டான்.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது.
- 1882 - பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1903 - கனடாவின் அல்பேர்ட்டாவில் 30 மில்லியன் கன மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
- 1916 - முதலாம் உலகப் போர்: பிரித்தானிய இந்தியப் படைகள் ஓட்டோமான் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தின் பல பகுதிகளிலும் உணவுப்பொதிகளை விமானத்தில் இருந்து வீசும் மானா நடவடிக்கையை ஐக்கிய இராச்சிய வான்படையினர் ஆரம்பித்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர் ஏவா பிரௌன் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்து மணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் ஏப்ரல் 30இல் தற்கொலை புரிந்து கொண்டனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டாக்கவ் என்ற இடத்தில் இருந்த வதை முகாமை அமெரிக்கப் படைகள் விடுவித்தனர்.
- 1946 - ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஹிடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
- 1970 - வியட்நாம் போர்: அமெரிக்க மற்றும் தென் வியட்நாம் படைகள் வியட் கொங் போராளிகளைத் தேடி கம்போடியாவை முற்றுகையிட்டன.
- 1975 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரை விட்டு புறப்பட்டனர்.
- 1986 - லொஸ் ஏஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.
- 1991 - வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
- 1995 - நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 2005 - 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.
- 2007 - வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின.
பிறப்புகள் [தொகு]
- 1818 - இரண்டாம் அலெக்சாண்டர், ரஷ்யாவின் பேரரசன் (இ. 1881)
- 1848 - ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906)
- 1891 - பாரதிதாசன், புரட்சிக்கவிஞர், பாவேந்தர் (இ. 1964)
- 1938 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2010)
- 1957 - மேமன்கவி, ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளி
- 1970 - அன்ட்ரே அகாசி, முன்னணி டென்னிஸ் ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1843 - வின்சென்ட் ரொசாரியோ, இலங்கையின் முதல் ஆயர்.
- 1980 - ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் (பி. 1899)
சிறப்பு நாள் [தொகு]
- ஜப்பான் - தேசிய நாள்
- அனைத்துலக நடன நாள்