லுட்விக் விட்கென்ஸ்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லுட்விக் விட்கென்ஸ்டைன்
மேற்கத்திய மெய்யியல்
20ஆம் நூற்றாண்டு மெய்யியல்
Wittgenstein1930.jpg
முழுப் பெயர் லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டைன்
பிறப்பு 26 ஏப்ரல் 1889
வியன்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி
இறப்பு ஏப்ரல் 29 1951 (அகவை 62)
கேம்பிரிட்ஜ், ஐக்கிய இராச்சியம்
சிந்தனை
மரபு(கள்)
பகுப்பாய்வு மெய்யியல், Post-Analytic Philosophy
முக்கிய
ஆர்வங்கள்
தருக்கம், மீவியற்பியல், மொழிசார் மெய்யியல், கணித மெய்யியல், மனம்சார் மெய்யியல், Epistemology
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
"Meaning is use," private language argument, conceptual therapy.

லுட்விக் விட்கென்ஸ்டைன் எனச் சுருக்கமாக அழக்கப்படும் லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டைன் (Ludwig Josef Johann Wittgenstein - 26 ஏப்ரல் 1889 – 29 ஏப்ரல் 1951) என்பவர், தருக்கம், கணித மெய்யியல், மனம்சார் மெய்யியல், மொழிசார் மெய்யியல் போன்ற துறைகளில் பணிபுரிந்த ஒரு ஆஸ்திரிய மெய்யியலாளர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களுள் ஒருவரான இவரது செல்வாக்கு பரவலானது ஆகும்.

62 ஆவது வயதில் இவர் இறப்பதற்கு முன் எழுதிய ஒரே நூல், டிரக்டாட்டஸ் லோஜிக்கோ-பிலோசோபிக்கஸ் (Tractatus Logico-Philosophicus) என்பது. இவர் தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் எழுதிய மெய்யியல் ஆய்வு (Philosophical Investigations) என்னும் நூல் இவர் இறந்த பின்னரே வெளியிடப்பட்டது. இவ்விரு நூல்களும், பகுத்தாய்வு மெய்யியல் துறையில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டுள்ளது.