அறிவாய்வியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிளேட்டோவின்படி அறிவு என்பது உண்மையும், நம்பப்படுவனவும் ஆனவற்றின் ஒரு பகுதி ஆகும்.

அறிவாய்வியல் (Epistemology) என்பது, அறிவின் மூலம், எல்லை, இயல்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும். இது மெய்யியலின் ஒரு துணைத்துறை. இத்துறையின் ஆய்வுகள் பெரும்பாலும் அறிவின் குணங்கள், அது எவ்வாறு ஒத்த எண்ணக்கருக்களான உண்மை, நம்பிக்கை, நியாயப்படுத்தல் போன்றவற்றுடன் தொடர்புபட்டுள்ளது என்பதை பகுத்தாய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இது அறிவு எப்படி உருவாக்கப்படுகிறது என்னும் விடயத்தையும் கையாள்வதுடன், பல்வேறு வகை அறிவு தொடர்பான முன்வைப்புக்களின் மீதுள்ள நம்பிக்கையற்ற தன்மைகள் குறித்தும் ஆராய்கிறது. அதாவது, அறிவாய்வியல் அறிவு என்பது என்ன?, அறிவைப் பெற்றுக்கொள்வது எப்படி?, மக்கள் எதனை அறிகிறார்கள்? போன்ற கேள்விகளுக்கு விடை காண முயல்கிறது எனலாம்.

அறிவு[தொகு]

அறிவாய்வியல் விடைகாண விழையும் அறிவு என்பது என்ன? என்னும் கேள்வி பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

அது வை அறிதலும், எப்படி அறிதலும்[தொகு]

இக் கட்டுரையிலும், பொதுவாக அறிவாய்வியலிலும் பொதுவாக எடுத்தாளப்படுவது எடுத்துக்கூறும் அறிவு ஆகும். இது "அது-அறிவு" (knowledge-that) என்றும் வழங்கப்படுகிறது. இது "எப்படி-அறிவு" (knowledge-how) எனப்படுவதிலும் வேறாகும். எடுத்துக்காட்டாக கணிதத்தில் 2 + 2 = 4 என்பது தெரிந்ததே. இதற்குப் புறம்பாக இது எப்படி? என்ற ஒரு அறிவும் உண்டு. எல்லோரும் இல்லாவிட்டாலும் பல மெய்யியலாளர்கள், இவ்விரு வகை அறிவுகளுக்கும் இடையில் முக்கியமான வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அறிவாய்வியல் முதல்வகை அறிவையே முதன்மையாக ஆய்வு செய்கிறது. பல மொழிகளில் இவ்விரு வகை அறிவுகளுக்கும் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அறிவாய்வியல்&oldid=1350446" இருந்து மீள்விக்கப்பட்டது