உண்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உண்மை என்னும் சொல் வாய்மை, நேர்மை, உள்ள தன்மை போன்ற பல பொருள்களில் ஆளப்படுகின்றது. மெய்யியலாளர்களும், பிற அறிஞர்களும் "உண்மை" என்பதன் வரைவிலக்கணம் தொடர்பில் ஒத்த கருத்து உடையவர்கள் அல்ல. உண்மை தொடர்பான பல கோட்பாடுகள் இன்னும் சர்ச்சைக்கு உரியனவாகவே உள்ளன.