விக்கிப்பீடியா:நடைக் கையேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நடைக் கையேடு கட்டுரைகளின் நடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை விளக்கும் கையேடாகும். ஒரே போன்ற நடையை அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.

இக்கையேடு பெரும்பாலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை) மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ஆகிய அமைப்பினரால் இணைந்து உருவாக்கப்பட்டு அடையாளம் பதிப்பின் மூலம் வெளிவந்த தமிழ் நடைக் கையேடு என்ற புத்தகத்தை அடியொற்றியே உள்ளது.

ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால் எழுதுவது சீராகவும் கருத்து வெளிப்படுவது தெளிவாகவும் இருக்கும்.
குறுக்கு வழி:
WP:MOS
குறுக்கு வழி:
WP:NK
விக்கிபீடியா: நன்னடை நெறிகள்
பொது: நடைக் கையேடு
Supplementary Manuals of Style
வாழ்க்கை வரலாறு
அறிவியற் கட்டுரைகள்
Dashes
Dates and numbers
Headings
எழுத்துப்பெயர்ப்பு
Links
Mathematics
Pronunciation
Sister projects
Titles
வணிகப்பெயர்கள்
கையேடுகளும் மற்ற உதவிகளும்
தொகுப்பது எப்படி?
பக்க வடிவமைப்பு(Layout)
Captions
அட்டவணைப்படுத்துதல்
Categories of people
அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்
Explain jargon
Guide to writing better articles
பட்டியல்கள்
பெயரிடல் மரபு
Picture tutorial
Proper names
Section
Technical terms and definitions

பொருளடக்கம்

[தொகு] பொதுக் கொள்கைகள்

[தொகு] உள் ஒருமைப்பாடு

நடையும், வடிவூட்டுதலும் ஒரு கட்டுரைக்குள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய கொள்கை ஆகும்; அது விக்கிபீடியாவின் எல்லா கட்டுரைகளுக்கும் ஒன்றுதான் என்பதல்ல. ஒரு வித தகவல் வெளியீடு, மற்றொரு விதத்தை விட நன்றாக இருக்கலாம், ஆனால் ஒரு கட்டுரையில் நடை, மற்றும், வடிவை ஒன்றாக வைத்திருப்பது படிப்பவருக்கு தெளிமையை உருவாக்குகிறது. அதனால், இந்த கையேடு பல வித பயன்முறைகளை ஆதரித்தாலும், ஒரு கட்டுரைக்குள் நடை இசைவை வைத்துக் கொள்க.

[தொகு] கட்டுரைகளின் உறுதி

நடுவர் குழாம் (The Arbitration Committee) தொகுப்பாசிரியர்கள் ஒரு கட்டுரையின் நடையை , நடைப் பற்றிய காரணமின்ற்றி வேறொரு காரணத்தை முன்னிட்டும் , மற்றொரு நடைக்கு மாற்றக் கூடாது, என தீர்மானித்து உள்ளனர். மேலும் நடைப் பற்றிய சச்சரவுகளும் தவிர்க்க வேண்டியவை. ஒரு கட்டுரையின் நடையை பற்றிய வேறுபாடு இருந்தால், முதலில் பெரிய அளவில் பங்களித்த எழுதனரின் உரையை கையாளுக..

[தொகு] மூலங்களை பின்பற்றுக

பார்க்க: விக்கிப்பீடியா நூதன ஆய்வு இல்லை

முதன்மைக் கட்டுரை: WP:NOR

பல எழுத்து முறைகள் , எ.கா. நபர்களின் பெயர்களை எழுதுவது, எப்படி மற்ற எழுத்தாளர்கள் கையாளுகிறார்கள் என்பதை பார்த்து தீர்மானிக்கலாம். வேறொரு சிறந்த காரணம் இல்லாவிட்டால், எப்படி தரமான இரண்டாம் வகை தமிழ் மூலங்களில் எழுத்து முறை கையாளப் படுகிறதோ, அதையே பின்பற்றவும், அந்த கட்டுரையின் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவையாக இருக்க வேண்டும். கட்டுரையின் ஆதாரங்கள் தற்காலத்திய வழக்கு தமிழின் பிரதிநிதியாக இல்லாவிட்டால், தற்கால வழக்கு தமிழை பின்பற்றவும், அதன் ஆதாரங்களை ஆலோசிக்கவும்


[தொகு] கட்டுரைத் தலைப்புகள்

முதன்மை கட்டுரை: Wikipedia:பெயரிடல் மரபு

கூடுமானவரை கட்டுரையின் தலைப்பு எழுவாயாக இருக்க வேண்டும், பயனிலையாக வருதலைத் தவிர்க்கவும். எந்த ஒரு வேற்றுமை உருபும் ('ஐ', 'ஆல்', 'கு' போன்றவை) இணைக்கப்படாத தனிப் பெயர்ச்சொல்லாக வர வேண்டும். எதுவாயிருப்பினும் கட்டுரையின் முதல் வரியிலோ முதல் பத்தியிலோ தலைப்பு வரும் வகையில் எழுத வேண்டும்.

கட்டுரையில் முதன் முறை தலைப்பு வரும்பொழுது அதை ''' ''' என்ற விக்கி குறியீட்டைப் பயன்படுத்தி தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, '''நடைக் கையேடு''' என்று எழுதினால் நடைக் கையேடு என்று வரும்

இதைத் தவிர எந்தெந்த இடங்களில் தலைப்பு சாய்வெழுத்துக்களில் வர வேண்டும் என்று அறிய #சாய்வெழுத்துக்கள் பகுதியைப் பாருங்கள்.

[தொகு] துணைத் தலைப்புகள்

முதன்மை கட்டுரை: Wikipedia:நடைக் கையேடு (தலைப்புகள்)

துணைத் தலைப்புகளை தெரியப்படுத்த == (2ஆம் படித்தலைப்பு) என்ற விக்கி குறியை பயன்படுத்துங்கள்; தடித்த எழுத்துக்களுக்கான விக்கி குறியான ''' (தடித்த எழுத்து) என்பதை பயன்படுத்த வேண்டாம். எடுத்துக்காட்டு:

==இது ஒரு துணைத் தலைப்பு==

என தொகுப்பு பெட்டியில் எழுதினால்

இது ஒரு துணைத் தலைப்பு

என வரும்.

இம்மாதிரி துணைத் தலைப்புகளை எழுதினால், தானாகவே கட்டுரை உள்ளடக்க அட்டவணை உருவாக்கப்படும். மேலும், இவ்வாறு எழுதப்படும் துணைத் தலைப்புகளில் உள்ள சொற்களுக்கு தேடல் முடிவுகளில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். மேலும், இவ்வாறு எழுதுவது வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தையும் எளிமையாக்கும்.

  • துணைத் தலைப்புகளில் இணைப்புகள் தருவதை தவிர்க்கவும்.
  • அளவுக்கு அதிகமாக துணைத் தலைப்புகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

[தொகு] நிறுத்தக்குறிகள்

பொது: நிறுத்தக்குறிகள்

பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளை எழுத்துக்குறிகள் என்கிறோம். இவற்றைப் பயன்பத்துவது தொடர்பான நெறிமுறைகள் விக்கிபீடியா:நடைக் கையேடு (நிறுத்தக்குறிகள்) எனும் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

[தொகு] இலக்கங்களை எழுதுதல்

பொது: இலக்கங்களை எழுதுதல், en:Wikipedia:Manual of Style (dates and numbers)

ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை எழுத்து வடிவில் குறிப்பிடுங்கள். பத்துக்கு மேற்பட்ட எண்களை, எண் வடிவிலேயே குறிப்பிடலாம்.

(சரியான நடை) ஐந்தாம் நூற்றாண்டு, 17ஆம் நூற்றாண்டு

(தவறான நடை) 5ஆம் நூற்றாண்டு, பதினேழாம் நூற்றாண்டு


[தொகு] மாற்றுச் சொற்கள்

முதன்மைக் கட்டுரை-விக்கிபீடியா:நடைக் கையேடு/மாற்றுச் சொற்கள்

[தொகு] செயப்பாட்டுவினையைத் தவிர்க்கவும்

செயப்பாட்டுவினை (passive voice) பெரும்பாலான இடங்களில் தவிர்க்கத்தக்கது. அது வாசிப்பதற்குத் தடையாகவும் தமிழ்மொழிக்கு இயல்பல்லாததால் குழப்பமாகவும் இருக்கும். "தவிர்க்கப்படக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்பதைத் "தவிர்க்கக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்றே சொல்லலாம். அதுதான் இயல்பான பேச்சுவழக்கும் பண்டைத்திராவிடமொழி இயல்புமாகும். செயப்பாட்டுவினை பெரும்பாலும் ஆங்கிலத்தின் செயப்பாட்டு வினையை அப்படியே நேரடிமொழிபெயர்ப்பால் விளைவது. "Edited pages" என்பதைத் "தொகுக்கப்பட்ட பக்கங்கள்" என்னாமல் "தொகுத்த பக்கங்கள்" என்றே இயல்பாகச் சொல்லலாம். நாம் தமிழ்மொழியில் "கேட்ட கேள்வி" என்றுதான் சொல்கிறோம். "கேட்கப்பட்ட கேள்வி" என்று சொல்வதில்லையே! சிலசமயங்களில் குழப்பத்தைத் தவிர்க்கவும் நெருக்கடியினாலும் செயப்பாட்டுவினையைப் புழங்குவதில் தவறில்லை. இங்கே சொல்லியுள்ளது ("சொல்லப்பட்டுள்ளது" என்று சொல்லவேண்டாம்!)பொதுவான நெறிமுறையே!


[தொகு] பிற மொழிப் பெயர்கள்

பிற மொழிப் பெயர்களை (இடங்கள், நபர்கள்) தமிழில் எழுதும் பொழுது, அப்பெயரின் ஆங்கிலப் பெயரை அடைப்புக்குறிக்குள் தாருங்கள்.இப்படி செய்வதால், பிற இணையத்தளங்களில் இந்தப் பெயர் குறித்து தேட உதவியாக இருக்கும். விக்கிபீடியா பக்கங்களை ஆங்கிலக் குறிப்புச் சொற்களைக் கொண்டு தேடுவதற்கும் இது உதவும்.

[தொகு] தேதிகள்

  • தமிழ் நாட்காட்டி முறை அனைத்துலகத் தமிழர்களால் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்படுவதால், குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு ஆங்கில நாட்காட்டி முறையை தமிழ் விக்கிபீடியாவில் பின்பற்றுதலின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஆங்கில நாட்காட்டி முறையில் திகதிகள் அறியப்படாத பண்டைத் தமிழ் நாட்டு வரலாற்றுத் தகவல்கள் மட்டும் தமிழ் நாட்காட்டி முறையின் கீழ் தரப்படலாம். ஆங்கில நாட்காட்டித் தேதிகளுடன் கூடுதலாக தமிழ் நாட்காட்டித் தகவல்கள் தருவது வரவேற்கப்படும் வேளையில், எத்தருணத்திலும் அவ்வாறு குறிப்பிடப்படும் தமிழ் மாதப் பெயர்கள் இங்கு விளக்கப்பட்டுள்ள தமிழ் நாட்காட்டி முறைக்கு இணங்க மட்டுமே இருத்தல் அவசியம்.
  • கி.பி ஆண்டுகளின் முன் கி.பி எனக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், கி.மு ஆண்டுகளுக்கு முன் கண்டிப்பாக கி.மு எனக் குறிப்பிடவும்.
  • இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு போன்ற சொற்றொடர்களை தவிர்த்து, ஆண்டு எண்ணை குறிப்பிட்டே எழுதுங்கள். இப்படி எழுதுவதின் மூலம், அடிக்கடி கட்டுரையில் உள்ள தகவல்களை இற்றைப்படுத்த வேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம்.

[தொகு] இணைப்புகள்

  • ஒரே உட்பக்கத்துக்கு திரும்பத் திரும்ப குறுகிய இடைவெளிகளில் உள் இணைப்பு தருவதைத் தவிர்க்கவும்


[தொகு] சாய்வெழுத்துக்கள்

பின் வரும் இடங்களில் சாய்வெழுத்துக்களைப் பயன்படுத்தவும்.

  • படைப்புத் திறன் வெளிப்பாடுகள்
    • நூல்களின் பெயர்கள்
    • திரைப்படப் பெயர்கள்
    • பாடல், கவிதை வரிகள்
    • மேற்கோள்கள்
  • உயிரியல் பெயர்கள்
  • பிறமொழிச் சொற்களின் எழுத்துப்பெயர்ப்புகள்
  • எழுதப்படும் பொருள் ஒரு சொல்லாகவோ அல்லது எழுத்தாகவோ இருப்பின் அதை சாய்வெழுத்தில் குறிப்பிடவும்.
  • (எ.கா)
    • அகரம் தமிழ் அரிச்சுவடியில் உயிரெழுத்துக்களில் முதலெழுத்தாகும்.
    • நாகரீகம் என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதா அல்லது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா என்பது பற்றி மொழியியலாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
மேலும் சில சூழ்நிலைகளை அறிந்து கொள்ள ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள நடை நெறியை 
இவ்விணைப்பினூடே சென்று காணவும். இயன்றால் சில 
தொடர்புடைய பகுதிகளை மொழிபெயர்க்கவும்.

[தொகு] தலைப்புகள்

Main article: Wikipedia:Manual of Style (titles)

சாய்வெழுத்துகள் கீழ்கண்டவைகளின் தலைப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

  • நூல்கள்
  • கணினி, நிகழ்பட ஆட்டங்கள்
  • அறமன்ற வழக்குகள்
  • திரைப்படங்கள்
  • நீண்ட கவிதைகள்/காப்பியங்கள்
  • பாட்டு தொகுப்புகள்
  • தனியார் பெயர் தாங்கிய பயண வண்டிகள்
  • இசை ஆக்கங்கள்
  • இதழ்கள் (நாளிதழ்கள், கிழமை இதழ்கள், மாதிகை)
  • நாடகங்கள்
  • பெயர் சூட்டப்பட்ட கப்பல்கள்
  • தொலைக்காட்சித் தொடர்கள்
  • ஓவியம், கலைப் பொருள்கள்


பொதுவாக நீண்டஆக்கங்களுக்கு சாய்வெழுத்து பயன்படுத்தவும். கீழுள்ள சிறிய ஆக்களின் தலைப்புகள் மேற்கோள் குறிகளுக்கிடையே இருக்க வேண்டும்.

  • கட்டுரைகள், உரைகள்
  • பெரிய நூலின் உட்பிரிவுகள்
  • தொலைக்கட்சி தொடரின் தனிப் பகுதிகள்
  • சிறிய கவிதைகள்
  • குறுநாவல்கள் (குறும்புதினங்கள்)
  • பாட்டுகள்.

சில இடங்களில் தலைப்பு சாய்வெழுத்திலோ, மேற்கோள் குறிகளுக்கிடையிலோ இருத்தல் கூடாது

  • மதச் சொற்பொழிவுகள்
  • நீதிமன்ற, சட்டமன்ற ஆவணங்கள்

[தொகு] சொற்களைச் சொற்களாகக் குறிப்பிடும் பொழுது

சொற்களைச் சொற்களாகவோ, ஓர் எழுத்தை எழுத்தாகவோ குறிப்பிடும் போது சாய்வெழுத்தை பயன்படுத்துக. எடுத்துக்காட்டு:

உலகமயமாகுதல் என்பது உலகளவில் பன்னாடுகளிடையே ஏற்படும் பொருட்கள், கலாசாரம், கருத்து, மூலதனம் இவற்றின் ஏற்றுமதி-இறக்குமதிகளை குறிக்க 20 ஆண்டுகளாகப் பயன்படுகிறது. (இங்கு உலகமயமாதல் என்பது அச்சொல்லைப் பற்றிய விளக்கம் ஆகையால் அச்சொல்லைக் சாய்வெழுத்துகளில் காட்டவும்)

தமிழில் உள்ள சார்பெழுத்துகளில் ஒன்று என்னும் அஃகேனம்.

[தொகு] பிற மொழிச் சொற்கள்

தெரிந்தும் தமிழ்ச் சொற்களுக்கு ஈடாக பிற மொழிச் சொற்களை பயன்படுத்த வேண்டாம். தெரியாமல் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் பிற பயனர்கள் பரிந்துரைப்பர், அல்லது மாற்றி எழுதுவர். எடுக்காட்டுக்கள்: கம்பியூட்டர் - கணினி, இண்டர்னட்-இணையம், சைக்கிள்-மிதிவண்டி.

சாய்வு எழுத்துக்களை, பிற மொழி சொற்றடர் கொடுக்கும் போதும், சில தமிழில் இன்னும் சேர்க்கப்படாத ஒரு சில பிறமொழி சொற்கள் கொடுக்கும் போதும், பயன்படுத்துக. தமிழ்மயப் படுத்தப்பட்ட பிறமொழிச் சொற்களை அந்த சந்தர்பங்களில் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டு: ஜப்பானிய மொழியில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஹிரகானா, கடகானா, கஞ்சி, சில சமயம் ரோமாஜி எழுத்துரு அறிவு தேவைப் படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் சேர்க்கப் பட்டுள்ள பிற மொழி சொற்களை எழுதும் போது, சாய்வு முறையை பயபடுத்தக் கூடாது - எடுத்துக்காட்டு டி. என். ஏ பாலிமரேசு, கடோலினியம், பெர்ள், தாலிபான். இதில் ஒரு குறுக்கு வழி, தமிழ் அகராதிகளில் வரும் சொற்களை சாய்வு படித்தி எழுதாமல் இருப்பது நன்று. நல்ல விக்கிப்பீடியா கட்டுரை எழுதுவது காட்டி படி, பிற மொழிச் சொற்கள் மிகக் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும், அப்பொழுது அம்மொழியில் அவற்றை எழுதுவதை பக்கத்தில் அடைப்பு குறிகளில் போடலாம்.

[தொகு] மரியாதைச் சொற்கள்

கட்டுரைகளில் வரும் நபர்களின் பெயர்களுடனும் (அவர்களின் வயது, பதவி என்னவாக இருந்தாலும்), பயனர் பேச்சுப் பக்கங்களிலும் (விக்கிபீடியாவில் அவர்கள் அனுபவம், பங்களிப்புகளின் அளவு, பொறுப்பு, வயது, பொதுவாழ்க்கை பதவி என்னவாக இருந்தாலும்), திரு, அவர்கள், மேதகு, செல்வி, என்பன போன்ற வழக்கமான தமிழ் மரபு சார்ந்த அடைமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தேவையற்றது. அடைமொழிகள் இல்லாத அழைப்பை(விளியைப்) பரிந்துரைக்கிறோம்.

பயனர்களுடன் தனிப்பட்ட விக்கி சமுதாயத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு இருக்கும் எனில் அவர்களின் பேச்சுப்பக்கங்களில் மட்டும் ஒருமையிலோ, அண்ணா, அக்கா, தம்பி என்றோ அழைக்கலாம். மற்றபடி, பொதுவான விக்கிபீடியா கலந்துரையாடல் பக்கங்களில் மற்ற பயனர்களை ஒருமையில் (நீ, உன் என்பது போல) அழைப்பது தவிர்க்க வேண்டுவது.


[தொகு] மேற்கோள்கள்

மேற்கோள்களை சாய்வெழுத்தில் இடத் தேவை இல்லை; அதற்கு விதிவிலக்கு புறமொழி வார்ததைகளை பயன்படுத்துதல், போன்றவையாகும். சில இடங்களில் சில சொற்கள் முதல் நூலில் இருப்பதா, அல்லது அங்குள்ளதை ஒருவர் குறிப்பாக சுட்டுகிறாரா என வேறுபடுத்தி காட்டுவது தேவையாக இருக்கலாம். எ.கா.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. (அழுத்தம் கொடுக்கப்பட்டது)

See also quotation marks.

[தொகு] குறுஞ்சொற்கள்

  • எடுத்துக்காட்டு - எ.கா
  • பின் குறிப்பு - பி.கு

[தொகு] அடைப்புக் குறிகள்

அடைப்புக் குறிகளுக்குள் வெற்றிடம் விடாமல் எழுதவும்.

எடுத்துக்காட்டு:

சரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்)

தவறான முறை - சுஜாதா ( எழுத்தாளர் )

அடைப்புக் குறியைத் தொடங்கும் முன் ஒரு வெற்றிடம் விடவும்.

எடுத்துக்காட்டு:

சரியான முறை - சுஜாதா (எழுத்தாளர்)

தவறான முறை - சுஜாதா(எழுத்தாளர்)

அடைப்புக் குறிகளுக்கான மேற்கண்ட வழிமுறைகள் கட்டுரைத் தலைப்புகளுக்கும் பொருந்தும்.

[தொகு] சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்

பொது: சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்

நிறுத்தக்குறிகளுக்கு அடுத்து ஒரு வெற்றிடம் விட்டு அடுத்து வரும் சொல்லை எழுதவும்.

[தொகு] புணர்ச்சி

பொது: புணர்ச்சி

[தொகு] எழுத்துப்பெயர்ப்பு

பொது: எழுத்துப்பெயர்ப்பு

[தொகு] சொல் தேர்வும் பொருள் தெளிவும்

பொது: சொல் தேர்வும் பொருள் தெளிவும்

[தொகு] பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்

பொது: பால்சாரா சொற்களைப் பயன்படுத்துதல்

[தொகு] அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்

பொது: அடிக்குறிப்பும் துணை நூற்பட்டியலும்



இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத்தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்