பெயர்ச்சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்

என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.

[தொகு] நன்னூல் விளக்கம்

     'இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
     தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
     வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
     ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே'
                                        - நன்னூல் - 275

[தொகு] எடுத்துக்காட்டுகள்

பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.


பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் பதிலிடு பெயர் அல்லது மாற்றுப் பெயர் எனப்படுகின்றது. நான், நீ, அவன், அவள் போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, மூவிடப் பெயர்கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம்.

மூவிடப் பெயர்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், ஒருமைப் பெயர்களாகவும் பன்மைப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம்.

[தொகு] மேலும் காண்க

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்