காலப் பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் இலக்கணத்தில் காலப் பெயர் என்பது ஒரு வகைப் பெயர்ச்சொல் ஆகும். இது, பொதுக் காலப் பெயர், சிறப்புக் காலப் பெயர் என இரண்டு வகைப்படும்.

ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறிக்காமல் காலத்தைப் பொதுவாகக் குறிக்கும் சொற்கள் பொதுக் காலப் பெயர்கள் எனப்படுகின்றன. ஆண்டு, விநாடி, கிழமை, காலம் போன்ற சொற்கள் பொதுக் காலப் பெயருக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். குறிப்பிட்ட காலத்தைச் சிறப்பாகக் குறிக்கும் சொற்களான மாசி, பங்குனி, இளவேனில் போன்றவை சிறப்புக் காலப் பெயர்களாகும்.

காலப் பெயர்களுக்கான பதில் சொற்களாக, இப்போது, எப்போது, அப்போது போன்ற சொற்கள் பயன்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=காலப்_பெயர்&oldid=306292" இருந்து மீள்விக்கப்பட்டது