கண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வெரு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றது. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கவல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வை இவ்வாறானதே; அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே.
[தொகு] இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு - கண். இது எவ்வாறு இயங்குகிறது?
நமது கண் ஒரு கேமிராவைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு கேமிரா பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி(டெவலப்) செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் ஃபிலிம் போன்றுள்ள ‘கார்னியா’(விழிப்படலம்) என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, ‘கார்னியா’ திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள ‘லென்ஸ்’-ஐச் சென்றடைகிறது. இந்த ‘லென்ஸ்’ தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’ எனப்படுகிறது.
கேமிரா-வில் உள்ள ஃபிலிமைப் போன்று இயங்கும் ‘ரெடினா’-வில், ‘லென்ஸ்’ ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்தி(டெவலப்) செய்யப்படுகின்றன.
--Layansan 05:42, 28 ஆகஸ்ட் 2009 (UTC)
[தொகு] மேலும் காண்க
[தொகு] வெளி இணைப்புகள்
- ‘ யுனைட் பார் ஸைட்’ ஆன்லைன் கண் நல கோர்ஸ்-(தமிழில்)
- DJO | விழியியல் குறித்த digital இதழ் (ஆங்கிலத்தில்)
- கண் நிலைகள் குறித்த அகராதி (ஆங்கிலத்தில்)
- கண்ணின் பரிணாம வளர்ச்சி (ஆங்கிலத்தில்)
- கண் குறித்த தலைப்புகள் (ஆங்கிலத்தில்)
- கண்ணின் வரைபடம் (ஆங்கிலத்தில்)
- விழித்திரை மற்றும் பார்வை மண்டலத்திற்கான அமைப்பு (ஆங்கிலத்தில்)